தேர்தல் தோல்வி... கனத்த இதயத்துடன் வாய்திறக்காமல் சென்ற பிரதமர் மோடி!!!

By vinoth kumarFirst Published Dec 11, 2018, 11:42 AM IST
Highlights

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக இருக்க எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு நல்கவேண்டும். அனைத்து பிரச்சனைகள் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார். மேலும் 5 மாநில தேர்தல் முடிவு குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்காமல் பிரதமர் மௌனமாக சென்றார்.

சட்டீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் 3 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் கை ஓங்கியுள்ளது. ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சட்டீஸ்கர் உள்ளிட்ட இடங்களில் பாஜக மண்ணை கவ்வியது. 

இந்நிலையில் பிரதமர் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றார். பல முக்கிய பிரச்சனைகள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன என்று தெரிவித்த அவர், அனைத்து உறுப்பினர்களும் பொறுப்புடன் செயல்படுவர் என நம்பிக்கை உள்ளது. அனைத்து பிரச்சனைகள் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படும் என்றும் பிரதமர் மோடி கூறினார். இதனையடுத்து 5 மாநில தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வாய் திறக்காமல் கடும் மௌனத்துடன் சென்றார்.

click me!