பச்சிளங் குழந்தையை தாயை போல் பாதுகாத்த நாய்கள்..!

Asianet News Tamil  
Published : Nov 09, 2016, 01:53 AM ISTUpdated : Sep 19, 2018, 01:18 AM IST
பச்சிளங் குழந்தையை தாயை போல் பாதுகாத்த நாய்கள்..!

சுருக்கம்

மேற்கு வங்காளத்தில் உள்ள புருலியா மாவட்டத்தில் பச்சிளங் குழந்தையை நான்கு நாய்கள் பாதுகாத்த அதிசய சம்பவம் அரங்கேறியுள்ளது.

மேற்கு வங்கத்தில் உள்ளி பள்ளியில் ஆசிரியராக பணிபுரிபவர் உல்ஹாஸ் சவுத்ரி பாதார்டி பாரா. இவர் தனது வீட்டில் இருந்த போது, அருகில் உள்ள ஒரு புதரில் இருந்து குழந்தை அழும் சப்தம் கேட்டுள்ளது. இதனால், உடனடியாக அங்கு சென்று பார்த்தபோது உல்ஹாஸ் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

நான்கு நாய்கள் புதரின் நடுவில் சுற்றி நின்று கொண்டிருக்க, நடுவில் பிறந்து ஏழு நாட்களே ஆன பச்சிளம்குழந்தை இளஞ்சிவப்பு துணியில் மூடப்பட்டு இருந்துள்ளது. பச்சிளங் குழந்தையை சாலையில் உள்ள தெரு நாய்கள் பாதுகாத்து நின்ற காட்சியை கண்ட அவர், ஒருநிமிடத்தில் மிரண்டே போய்விட்டார். ஒருவேளை நாய்கள் மட்டும் அந்த குழந்தையை பாதுகாக்காமல் இருந்திருந்தால் பல காகங்களுக்கு மத்தியில் குழந்தை சிக்கி தவித்திருக்குமாம்.

இதனைக் கண்ட உல்ஹாஸ் உடனடியாக அக்கம்பக்கத்தினரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். அவர்கள் இந்த சம்பவத்தை காவல்துறையினரிடம் தெரிவிக்க, போலீசார் குழந்தையை பத்திரமாக மீட்டுள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

LPG Crisis: 10 நாள்ல கேஸ் தீர்ந்துடுமா? போர் பதற்றத்தால் இந்தியாவில் அசாதாரண சூழல்..
பெற்றோர் எதிர்ப்பு.. போலீஸில் தஞ்சம்.. காதலனை கரம் பிடித்த கும்பமேளா வைரல் அழகி மோனலிசா!