1-12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜன.25 முதல் நேரடி வகுப்பு... அரசு அதிரடி அறிவிப்பு!!

By Narendran SFirst Published Jan 20, 2022, 7:34 PM IST
Highlights

மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் 25 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் 25 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 3.82 கோடியை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,17,532 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். இதன் மூலம், கொரோனா பாதிக்கப்பட்டோரின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,82,18,773 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 24 மணி நேரத்தில் 491 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,87,693 ஆக உயர்ந்தது. மேலும் கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 2,23,990 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,58,07,029 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 19,24,051 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதேபோல் இந்தியாவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,961 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 93.69% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.28% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 5.03% ஆக குறைந்துள்ளது. இந்த நிலையில் அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் 25 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது. 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்பு நடத்தப்படும் எனவும் கூறியுள்ளது. கொரோனா காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது.

நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வந்ததால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. பள்ளிகளில் நடைபெறும் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டது. மஹாராஷ்டிர மாநிலத்தில், கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறைந்து வருவதை அடுத்து வரும் திங்கட்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஜனவரி 25 முதல் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளை மீண்டும் திறக்க மகாராஷ்டிரா கல்வித்துறை எடுத்த முடிவு மாணவர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற வாய்ப்புள்ளது என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப ஒப்புக் கொண்டதாக பள்ளி அதிகாரிகள் தெரிவித்தனர்.

click me!