டெல்லியில் நாளை தொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை - ஏன் தெரியுமா?

 
Published : Nov 07, 2017, 07:16 PM ISTUpdated : Sep 19, 2018, 01:24 AM IST
டெல்லியில் நாளை தொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை - ஏன் தெரியுமா?

சுருக்கம்

Deputy Chief Minister Manish Sisodia said that all elementary schools in Delhi will be given a holiday due to air pollution.

காற்று மாசு காரணமாக டெல்லியில் அனைத்து தொடக்க பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்

டெல்லியில் தற்போது குளிர்காலம் தொடங்கி விட்டது. இதனால் நள்ளிரவுக்கு மேல் பனிப்பொழிவும் உள்ளதால்  கடந்த 2 நாட்களாக காற்றில் மாசு அதிகமாக காணப்படுகிறது. 

இந்நிலையில் நேற்று  இரவு நிலைமை மோசம் அடைந்ததால் மெல்லிய போர்வை போன்ற அடர்த்தியான மாசு நகரை சூழந்து இருந்தது. 

இதுகுறித்து மாசு கட்ட்ப்பாட்டு வாரியம் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது. அதில், நகரில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளதாக குறிப்பிட்டிருந்தது. 

இதையடுத்து, டெல்லியில் நாளை அனைத்து தொடக்க பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாகவும், தேவைப்பட்டால், விடுமுறை நீட்டிக்கப்படும் என்றும் துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!
பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!