ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியான 6 மணி நேரத்தில் 15 டன் தங்கம் விற்பனை

Asianet News Tamil  
Published : Dec 08, 2016, 06:10 PM ISTUpdated : Sep 19, 2018, 02:44 AM IST
ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியான 6 மணி நேரத்தில் 15 டன் தங்கம் விற்பனை

சுருக்கம்

பிரதமர் மோடியின் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியான 6 மணிநேரத்தில், 15 டன் தங்கம், தங்க நகைகள் விற்பனையாகியுள்ளன என இந்திய தங்கம் மற்றும் நகைகள் விற்பனை அமைப்பு தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி அறிவிப்பு

நாட்டில் கள்ள நோட்டையும், கருப்பு பணத்தையும் ஒழிக்கும் வகையில், பிரதமர் மோடி கடந்த மாதம் 8-ந்தேதி ரூ.500, ரூ1000 நோட்டுகளைச் செல்லாது என அறிவித்தார். இந்த அறிவிப்பை கடந்த மாதம் 8-ந்தேதி இரவு 8மணிக்கு அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து, கருப்பு பணம் பதுக்கியிருப்போர், நகைகக் கடைகளில் தாங்கள் வைத்திருக்கும் பணத்துக்கு தங்க கட்டிகளாகவும், நகைகளாகவும் வாங்கிக் குவித்தனர்.

அதிகாலை விற்பனை

மும்பை, உத்தரப்பிரதேசம், டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட முக்கிய நகரங்களில், ஏறக்குறைய இரவு 8 மணியில் இருந்து 9-ந்தேதி அதிகாலை 2 மணி வரை விற்பனை நடந்துள்ளது. இந்த 6 மணி நேரத்தில் 15டன் தங்க கட்டிகள், நகைகள் விற்பனையாகியுள்ளன என தெரியவந்துள்ளது.

15 டன் தங்கம்

இது குறித்து ‘இந்திய புல்லியன் மற்றும் ஜூவல்லரி அசோஷியேசன்’ தேசிய செயலாளர் சுரேந்திர மேத்தா கூறுகையில், “ எங்கள் அமைப்பில் நாடுமுழுவதும் 2500 உறுப்பினர்கள் உள்ளனர். பிரதமர் மோடி கடந்த மாதம் 8-ந்தேதி இரவு 8 மணிக்கு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

அந்த அறிவிப்புக்குப்  ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான 15 டன் தங்கக்கட்டிகள், நகைகளை விற்பனை செய்துள்ளனர். ஏறக்குறைய இந்த விற்பனை நவம்பர் 8-ந்தேதி இரவு 8 மணியில் இருந்து 9-ந்தேதிஅதிகாலை 2 மணி வரை, அதாவது 6 மணி நேரத்தில் நடந்துள்ளது. இந்த விற்பனையில் பாதிக்கு மேல் டெல்லி, உத்தரப்பிரதேசம், மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் நடந்துள்ளது.

6 மணிநேரம்

ஏறக்குறைய நாடுமுழுவதும் 6 லட்சம் தங்க நகை விற்பனையாளர்கள் இருக்கிறார்கள். இதில் மிகக்குறைவாக ஆயிரம் வர்த்தகர்கள் மட்டுமே, நவம்பர் 8-ந்தேதி அன்று ரூ.500, ரூ.1000 நோட்டுகளை அதிகமாக வாங்கிக்கொண்டு தங்க நகைகளை விற்பனை செய்துள்ளனர். ஏறக்குறைய ஒருமாதம் விற்பனையை 6 மணிநேரத்தில் நடத்தி முடித்துள்ளனர்.

சட்டவிரோத விற்பனையில் ஈடுபட்ட அந்த ஆயிரம் வர்த்தகர்கள் மீது மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் '' எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், கடந்த நவம்பர் 7 முதல் 9ந்தேதி வரையிலான விற்பனை விவரங்களை தாக்கல் செய்யக்கோரி, மத்தியப் பிரதேசம் மாநிலம் போபால் நகரில் ஏறக்குறைய 650 நகைக்கடை உரிமையாளர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

 

PREV
click me!

Recommended Stories

இனி நெடுஞ்சாலைகளில் லாரியை நிறுத்தினால் நேரடி அபராதம்.! லாரி டிரைவர்களுக்கு பெரிய ஷாக்.!
இந்தியா முழுவதும் 908 சிறப்பு ரயில்கள் இயக்கம்.. தமிழ்நாட்டில் எவ்வளவு? மாஸ் காட்டும் ரயில்வே!