திருமணத்துக்கு ரூ.2.5 லட்சத்துக்கு மேல் எடுக்க வாய்ப்பு உண்டா?

Asianet News Tamil  
Published : Nov 28, 2016, 06:28 PM ISTUpdated : Sep 19, 2018, 02:15 AM IST
திருமணத்துக்கு ரூ.2.5 லட்சத்துக்கு மேல் எடுக்க வாய்ப்பு உண்டா?

சுருக்கம்

திருமணச் செலவுக்கு மணமகள், மணமகன் வீட்டார் வங்கியில் இருந்து ரூ.2.5 லட்சம் ரொக்கம் மட்டுமே எடுக்க வேண்டும் என்ற ரிசர்வ் வங்கி விதிமுறையை தளர்த்துவது குறித்து தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு மீதான அறிவிப்பை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று வெளியிடுகிறது.

பொதுநலமனு

பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்பைத் தொடர்ந்து, வங்கியில் இருந்து திருமண வீட்டார் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக எடுக்க ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகள் விதித்தது.

இந்த உத்தரவை தளர்த்த வேண்டும் என்றும், நீதிமன்றங்களில் கட்டணம் செலுத்த பழைய ரூபாய்களை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

தளர்த்துங்கள்

இந்த மனு தலைமை நீதிபதி ஜி. ரோகினி, நீதிபதி சங்கீதா திங்கரா சிகால் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு தாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், “ திருமணச் செலவுக்கு ரூ.2.5 லட்சம் மட்டுமே ரொக்கமாக வங்கியில் இருந்து எடுக்கும் விதியை தளர்த்த வேண்டும். ஒவ்வொரு சமூகத்தினரின் திருமணத்திலும் பல்வேறு விதமான சடங்குகள் உள்ளதால், அவற்றுக்கு இந்த பணம் போதாது. மணமகன், மணமகள் பெற்றோர் பணம் எடுக்க விதிமுறைகளை தளர்த்த வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டது.

தவறாகப் பயன்படுத்தப்படும்

மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின் ஆஜராகி வாதிடுகையில், “ மத்திய அரசு ஏற்கனவே பல்வேறு விதிமுறைகளை தளர்த்தி உள்ளது. இன்னும் விதிமுறைகளை தளர்த்தினால், அதை பலர் தவறாகப் பயன்படுத்தக் கூடும். இந்த பணத்தை  பெறுவதற்கு விதிவிலக்குகளும் அரசு கொடுத்து இருக்கிறது. நாங்கள் இதுபோன்ற விதிமுறைகளும் விதிக்காவிட்டால், யார் வேண்டுமானால், திருமண பத்திரிகையை காட்டி வங்கியில் தங்களின் கணக்கில் இருந்து ரூ.2.5 லட்சத்தை எடுக்க முடியும்.

நீதிமன்ற கட்டணம், அபராதம் செலுத்துவதில் பழைய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த அரசு அனுமதித்துள்ளது. சாமானிய மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு பல விதிமுறைகளை தளர்த்தியுள்ளது. புதிய ரூ.500 நோட்டையும் நீதிமன்ற கட்டணம் செலுத்த பயன்படுத்தலாம்'' என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த மனுமீதான உத்தரவு நாளை(இன்று)பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

PREV
click me!

Recommended Stories

இனி பெட்ரோல் விலை உயர்வு பற்றி கவலை இல்லை.! அரபு நாடுகளுக்கு ஆப்பு வைத்த இந்தியா.! பெட்ரோலுக்கு புது மாற்று வந்தாச்சு.!
தொழிலாளர்களுக்கு ஜாக்பாட்.. இனி 15 நிமிடம் கூடுதலா வேலை பார்த்தாலும் இரட்டை சம்பளம்..!