10-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 12-ம் வகுப்பு படிக்கும் 4 மாணவர்கள்... கருலைப்பு மாத்திரை கொடுத்த ஹாஸ்டல் நிர்வாகம்!

Published : Sep 19, 2018, 06:06 PM IST
10-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 12-ம் வகுப்பு படிக்கும் 4 மாணவர்கள்... கருலைப்பு மாத்திரை கொடுத்த ஹாஸ்டல் நிர்வாகம்!

சுருக்கம்

உத்தரகாண்டில் ஹாஸ்டலில் 10-ம் வகுப்பு மாணவியை, 12-ம் வகுப்பு மாணவன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்டில் ஹாஸ்டலில் 10-ம் வகுப்பு மாணவியை, 12-ம் வகுப்பு மாணவன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விவகாரத்தை மறைப்பதற்காக பள்ளி நிர்வாகமே கரூவை கலைக்க மாத்திரையை கொடுக்க கட்டாயப்படுத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அப்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவியை 12-ம் வகுப்பு படிக்கும் 4 மாணவர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் அந்த மாணவிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது ஹாஸ்டல் வார்டன் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது 16 வயது மாணவி கர்ப்பமாக இருப்பதாக மருத்தவர்கள் தெரிவித்தனர்.

 

இந்த விவகாரம் தொடர்பாக ஹாஸ்டல் வார்டன் உள்ளிட்டோர் அதிர்ச்சியடைந்தனர். இதனை தொடர்ந்து பள்ளி நிர்வாகம் யாருக்கும் தெரியாமல் இருக்க அந்த மாணவிக்கு கர்ப்பத்தை கலைக்கும் மாத்திரையை கட்டாயமாக கொடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த மாணவி பெற்றோருக்கு தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், பள்ளி நிர்வாகி அவரது மனைவி, ஹாஸ்டல் வார்டன், காவலர் உள்ளிட்ட 5 பேர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

PREV
click me!

Recommended Stories

இந்தியாவில் நேருக்கு நேர் சந்திக்கும் உலகின் பரம எதிரிகள்..! ரத்தக் கொதிப்பில் பாகிஸ்தான்- சீனா..!
இஸ்லாமிய சமூகத்திற்கு பேரிடி..! 5 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்த பாஜக அரசு..!