உச்சம் தொடும் கொரோனா..ஒரே நாளில் 1.5 லட்சம் பேர் பாதிப்பு.. கடுமையாக்கப்படுமா ஊரடங்கு..?

By Thanalakshmi V  |  First Published Jan 9, 2022, 4:12 PM IST

இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1.5 லட்சத்தை தாண்டியது. ஒமைக்ரான் பாதிப்பு 3,623-ஆக அதிகரித்துள்ளது.
 


உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,59,632 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை 5,90,611 பேராக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றில் இருந்து 40,863 பேர் குணமடைந்துள்ளனர். அதே போல் கொரோனாவிற்கு இன்று ஒரே நாளில் 327 பேர் பலியாகியுள்ளனர். நாட்டில் இதுவரை கொரோனா தொற்றிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4,83,790 ஆக உள்ளது.

அதே போன்று, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் ஒமைக்ரான் தொற்றால் 552 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை 3,623 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 27 மாநிலங்களில் ஒமைக்ரான் வகை கொரோனா பரவியுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஒமைக்ரான் பாதிப்பிலிருந்து 1,409 பேர் குணமடைந்துள்ளனர். ஒமைக்ரா தொற்றினால் பாதிக்கபட்டு மருத்துவமனைகளில் 2,214 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1009 பேருக்கும், டெல்லியில் 513 பேருக்கும், கர்நாடகாவில்  441 பேருக்கும், ராஜஸ்தானில் 373 பேருக்கும், கேரளாவில் 333 பேருக்கும் இதுவரை ஒமைரான் தொற்று ஏற்பட்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

undefined

இந்நிலயில் இந்தியாவில் கொரோனா பரவலின் மூன்றாவது அலை எப்போது முடிவிற்கு வரும் என்பது தொடர்பாக ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. பெங்களூருவிலுள்ள ஐஐஎஸ்சி (Indian Institute of Science)மற்றும் ஐஎஸ்ஐ அமைப்புகள் சேர்ந்து ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வின்படி, இந்தியாவில் கொரோனா பரவலின் மூன்றாவது அலை வரும் ஜனவரி கடைசி அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் உச்சத்தை தொடும் என்று கூறப்படுகிறது. அதேபோல் ஒவ்வொரு மாநிலங்களிலும் கொரோனா பரவல் உச்சத்திற்கு வரும் நாட்கள் மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மற்றும் கொரோனா தடுப்பூசி விகிதம் பொருத்து மாறலாம் என்று ஆய்வு தெரிவிக்கிறது.

கடந்த காலங்களில் ஏற்பட்ட தொற்று, தடுப்பூசிகள் ஏற்படுத்திய ஆக்கப்பூர்வமான விளைவுகள், மக்கள் மத்தியில் பாதிப்பு எளிதாக பரவுத் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில், இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவுகள் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக்கத்தின் Covid 19 tracker என்ற ஆய்வும் உறுதி செய்யும் விதத்தில் அமைந்துள்ளது. அந்த ஆய்வின்படி இந்தியாவில் இந்தாண்டு கொரோனா பரவல் மிகவும் குறைவான நாட்களில் உச்சத்தை தொட்டு பின்பு குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 2021ஆம் ஆண்டு பரவலை போல் இம்முறை கொரோனா பரவல் இந்தியாவில் சில மாதங்கள் நீடிக்காது என்று வல்லுநர்கள் அந்த ஆய்வில் கூறியிருந்தனர். இதேபோல் ஐஐடி-கான்பூர் நடத்திய ஆய்விலும் இந்தியாவில் கொரோனா பரவல் வரும் பிப்ரவரி மாதம் 3ஆம் தேதி உச்சத்தை தொடும் எனக் கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

click me!