மே மாதம் கடைசி வரை நீட்டிக்கப்படும் ஊரடங்கு... மகாராஷ்டிர முதல்வர் அதிர்ச்சி தகவல்..!

By Thiraviaraj RMFirst Published May 9, 2020, 10:41 AM IST
Highlights

இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் மே இறுதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். 
 


இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் மே இறுதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனையடுத்து கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு மூன்றாவது முறையாக தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் 17-ம் தேதியுடன் இந்த ஊரடங்கு முடிவடைகிறது. 

இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகம் உள்ளது. இதனையடுத்து அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து  ஆலோசனை நடத்தினார். காணொலிக் காட்சிமூலம் நடைபெற்ற இந்த ஆலோசனையில் பாஜக, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தின்போது, மகாராஷ்டிராவில் வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதால், ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பாஜக, நவநிர்மான் சேனா உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின. இதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் உத்தவ் தாக்கரே, “மகாராஷ்டிராவில் நோய்த்தொற்று அதிகம் உள்ளதால் வரும் மே இறுதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது”எனத் தெரிவித்தார். 
 

click me!