தொடரும் பசுக்காவலர்களின் அட்ராசிட்டி... - எருமைகளை ஏற்றி வந்த லாரிகள் மீது தாக்குதல்!!

First Published Jul 8, 2017, 2:44 PM IST
Highlights
cow vigilantes attacked buffalo vehicle


இந்தியா முழுவதும் மாடுகளை உணவுக்காக விற்பனை செய்வதை மத்திய அரசு தடை விதித்தது.
இதற்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

இந்நிலையில் மாட்டுக்கறி உண்பவர்களையும் மற்றும் மாடுகளை விற்பனைக்காகக் கொண்டு செல்பவர்களை, பசுக் காவலர்கள் என்ற பெயரில் தாக்கும் சம்பவங்கள் நாடு முழுவதும் தொடர்ந்து வருகின்றன. உ.பி, ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் இந்தச் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. 

 கடந்த சில தினங்களுக்கு முன் டெல்லியில், ரயிலில் மாட்டுக்கறி எடுத்துச் சென்றதாக கூறி ஜுனைத்  என்ற 16 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டான்.  இதன் பிறகும் தாக்குதல் சம்பவங்கள் குறைந்த பாடில்லை. 

இந்நிலையில் டெல்லியில் இன்று எருமைக்கன்றுகளை எடுத்துச்சென்ற வாகனங்கள் மீது பசுக்காவலர்கள் கும்பல் ஒன்று கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளது. 

எருமைக்கன்றுகள்  எடுத்து வந்த ஆறு வாகனங்களை அடித்து நொறுக்கிய அந்த கும்பல் வாகன ஓட்டுநர்களையும் சரமாரியாக தாக்கியது. இந்த சம்பவத்தில் ஓட்டுநர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!