இந்தியாவின் முதல் கொரோனா XE பாதிப்பு... குஜராத்தில் ஒருவருக்கு உறுதி... வெளியான தகவல்..!

By Kevin Kaarki  |  First Published Apr 9, 2022, 9:59 AM IST

முன்னதாக வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்திருந்த பயணி ஒருவருக்கு கொரோனா வைரஸ் XE வேரியண்ட் பாதிப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. 


குஜராத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் XE வேரியண்ட் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இத்துடன் XM வேரியண்ட் பாதிப்பும் ஒருவருக்கு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், புது வகை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருக்கும் நோயாளிகள் விவரங்கள் மர்மமாகவே உள்ளது.

முன்னதாக வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்திருந்த பயணி ஒருவருக்கு கொரோனா வைரஸ் XE வேரியண்ட் பாதிப்பு இருப்பதாக தகவல் வெளஇயாகி இருந்தது. எனினும், மத்திய குடும்பநல மற்றும் சுகாதார துறை அமைச்சகம் சார்பில் அந்த தகவலில் உண்மை இல்லை என மறுக்கப்பட்டது. மேலும் அந்த பயணியிடம் இருந்து சேகரிக்கப்பட்ட விவரங்களில் புது XE வேரியண்ட் இருப்பதை உறுதிப்படுத்தும் ஆதாரம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

Latest Videos

undefined

தென் ஆப்ரிக்கா பெண்:

கடந்த வாரம் மகாராஷ்டிரா மாநிலத்தில் 50 வயது மதிக்கத்தக்க தென் ஆப்ரிக்கா பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் XE வேரியண்ட் தொற்று ஏற்பட்டு இருப்பதாக நேற்று தகவல்கள் வெளியானது. இந்த தகவல் வெளியான சில மணி நேரங்களிலேயே மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் சார்பில் ஊடகத்தில் வெளியான தகவல்களில் உண்மையில்லை என தெரிவித்து இருந்தது.

தென் ஆப்ரிக்கா பெண்ணிற்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகள் மத்திய அரசு நிறுவனமான INSACOG ஆய்வாளர்களால் ஆய்வு செய்யப்பட்டது. அதில் இந்த வேரியண்ட் தன்மைகள் எதுவும் XE வேரியண்ட் உடன் ஒற்றுப் போகவில்லை என தெரிவிக்கப்பட்டு விட்டது. 

அதி வேகமாக பரவும்:

புதிய கொரோனா வைரஸ் திரிபான XE வேரியண்ட் மற்ற கொரோனா வைரஸ் வேரியண்ட்களை விட அதி வேகமாக பரவும் என உலக சுகாதார மையம் கடந்த வாரம் தெரிவித்து இருந்தது. புதிய கொரோனா வைரஸ் திரிபு XE பிரிட்டனில் முதல் முறையாக கண்டறியப்பட்டது. இதுவரை மேற்கொள்ளப்பட்டு இருக்கும் ஆய்வு முடிவுகளின் படி புதிய கொரோனா வைரஸ் XE வேரியண்ட் மற்ற வைரஸ்களை விட பத்து மடங்கு அதிவேகமாக பரவும் என தெரிவித்து இருக்கிறது. 

எனினும், இது மற்றொரு கொரோனா அலையை உருவாக்கும் அளவுக்கு மிக தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்துமா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. கொரோனா வைரஸ் XE வேரியண்ட் என்பது ஒமிக்ரான் BA. 1 மற்றும் BA. 2 வைரஸ்களின் மறு உருவாக்கம் பெற்ற திரிபு ஆகும். 

click me!