புதிய உச்சம்... கொரோனா பிறப்பிடமான சீனாவை பின்னுக்கு தள்ளிய தமிழகம்..!

By vinoth kumarFirst Published Jun 30, 2020, 5:44 PM IST
Highlights

கொரோனா உருவான சீனாவை விட தமிழகத்தில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா உருவான சீனாவை விட தமிழகத்தில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சீனாவின் பிறப்பிடமான கொரோனா வைரஸ் நாடு முழுவதும் நாளுக்கு நாள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இன்றுடன் ஊரடங்கு முடிவுக்கு வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதும் 18,522 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 5.6 லட்சமாக அதிகரித்தது. நேற்று மட்டும் 418 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 16,893 ஆக உயர்ந்தது.

எனினும், கொரோனாவிலிருந்து குணமடைந்து மீள்வோர் விகிதம் 58.67 சதவிகிதமாக இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2,15,125 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 13,099 பேர் உள்பட 3,34,821 பேர் கொரோனாவிலிருந்து குணமாகியுள்ளனர். இதுவரை 86,08,654 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 5,257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,69,883 மாறியுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,610ஆக இருப்பது பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஜூலை மாதத்தில் மகாராஷ்டிராவில் கொரோனா உச்சமடையும் என்று எதிர்பார்க்கப்படுவதால், வரும் காலங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 3,949 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதால், மொத்த பாதிப்பு 86,224ஆக அதிகரித்துள்ளது. நேற்று 62 பேர் உயிரிழந்ததையடுத்து மொத்தம் இதுவரை 1,141 பேர் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். சீனா முழுவதும் 83,531 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ள நிலையில், அதைவிட தமிழகத்தில் அதிகம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!