
புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளின் விலை என்ன? …ரிசர்வ் வங்கி புதிய தகவல்…
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 8 ஆம் தேதி அறிவித்தார். அதற்கு பதிலாக புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது,
தற்போது புழக்கத்தில் விடப்பட்டுள்ள இந்த புதிய ரூபாய் நோட்டுக்களின் விலை என்ன என்பது குறித்த தகவலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
அதன்படி புதிய 500ரூபாய் நோட்டு ஒன்று தயாரிக்க ஆகும் செலவு 3 ரூபாய் 9 காசுகள் என கணக்டப்பட்டுள்ளது இதேபோன்று 2000 ரூபாய் நோட்டின் விலை 3 ரூபாய் 54 காசுகள் என ரிசர்வ் வங்கி தெரியித்துள்ளது.
இந்நிலையில் ரிசர்வ் வங்கி விரைவில் புதிய 50 ரூபாய் நோட்டுக்களை வெளியிடவுள்ளது.