12-18 வயதினருக்கான தடுப்பூசிக்கு அனுமதி... Corbevax-க்கு ஒப்புதல் அளித்தது மத்திய அரசு!!

Published : Feb 21, 2022, 07:59 PM IST
12-18 வயதினருக்கான தடுப்பூசிக்கு அனுமதி... Corbevax-க்கு ஒப்புதல் அளித்தது மத்திய அரசு!!

சுருக்கம்

12 - 18 வயது சிறுவர்களுக்கு கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்தலாம் என்று மத்திய மருத்துவ தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. 

12 - 18 வயது சிறுவர்களுக்கு கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்தலாம் என்று மத்திய மருத்துவ தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. கொரோனா என்னும் கொடிய வைரஸ் உலக அளவில் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளது. 2019ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட இந்த வைரஸ் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களை காவு வாங்கியது. அடுத்தடுத்து உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் இந்த ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் மீண்டும் அதன் ஆட்டத்தை துவக்கிய நிலையில் தற்போது சற்றே அடங்கியுள்ளது. இதை அடுத்து கொரோனாவை கட்டுப்படுத்தும் ஒரே அஸ்திரம் தடுப்பூசி என்னும் நிலை ஏற்பட்டது. அதன்படி உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசிகளை தயார் செய்து மக்களுக்கு செலுத்தி வருகின்றன. தடுப்பூசி தான் மக்களை காக்கும் பேராயுதம் என உலக சுகாதார அமைப்பும், உலக நாடுகளின் தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பெரும்பான்மையான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை சுமார் 100.8 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளும், சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் தடுப்பூசி குறித்த அச்சம் காரணமாக சிலர் இதுவரை தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாமல் இருக்கின்றனர். இதையடுத்து தடுப்பு ஊசி செலுத்தியவர்களுக்குத்தான் பொது இடங்களில் அனுமதி, பயணம் மேற்கொள்ள அனுமதி உள்ளிட்ட பல்வேறு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் தடுப்பூசி செலுத்துவதை கட்டாயமாக்கி உள்ளன. இந்த நிலையில் கோர்பேவாக்ஸ் என்ற புதிய கொரோனா தடுப்பூசியை 12 - 18 வயது சிறுவர் சிறுமியர்களுக்கு செலுத்தலாம் என்று மத்திய மருத்துவ தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

இந்தியாவில் ஏற்கனவே, கோவிஷீல்டு, கோவாக்சின், ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், ஐதராபாத்தை சேர்ந்த பயாலஜிக்கல்-இ நிறுவனம், அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் இணைந்து கோர்பேவாக்ஸ் என்ற தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. இந்த தடுப்பூசியின் மாதிரிகளை மனிதர்களுக்கு கொடுத்து பரிசோதனை செய்ததில், அதில் பக்கவிளைவுகள் இல்லாத நல்ல முடிவு கிடைத்துள்ளது. இந்நிலையில் 12 - 18 வயது சிறுவர்களுக்கு கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்தலாம் என்று மத்திய மருத்துவ தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. உயிரியல் தடுப்பூசியான கோர்பேவாக்ஸ் தடுப்பூசி தயாரிக்கும் ஐதராபாத்தை சேர்ந்த பயாலஜிக்கல்-இ நிறுவனம் இதற்கான ஆவணங்களை அரசுக்கு அளித்துள்ளது. 2 டோஸ் கோர்பேவாக்ஸ் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு 5 கோடி டோஸ்களை வாங்குவதற்கு ஆர்டர் செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

PREV
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!