பொது நிதி திரட்டும் திட்டத்தின் மூலம் 6 மணி நேரத்தில் ரூ.1 கோடி கிடைத்துள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது. இதற்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. அந்த வகையில், க்ரவுட் ஃபண்டிங் எனப்படும் பொது நிதி திரட்டும் பிரசாரமான தேசத்திற்கு நன்கொடை எனும் திட்டத்தை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
இந்த திட்டத்திற்கு மாநில அளவிலான நிர்வாகிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் பிரதிநிதிகள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், மாநில காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், அலுவலகப் பணியாளர்கள், பொதுமக்கள் என யார் வேண்டுமானாலும் நிதி அளிக்கலாம்.
undefined
காங்கிரஸ் கட்சியின் தேசத்திற்கு நன்கொடை பிரசாரத் திட்டத்தை தொடங்கி வைத்த அக்கட்சியின் அகில இந்திய இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, வேலையின்மை மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிரான போராட்டத்தில் மக்களைக் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.
இந்த நிலையில், பொது நிதி திரட்டும் திட்டமான தேசத்திற்கு நன்கொடை பிரசாரத்தின் மூலம் 6 மணி நேரத்தில் ரூ.1 கோடி கிடைத்துள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. முன்னதாக, இத்திட்டத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்ட காங்கிரஸ் பொருளாளர் அஜய் மாக்கன், பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், டெல்லி மாநிலத் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் ரூ.1,38,000 நன்கொடையாக வழங்கினர். அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஸ்ரீவைகுண்டம் ரயில் பயணிகளை மீட்கும் நடவடிக்கை தொடங்கியது!
தொடக்க விழாவில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “எங்கள் கட்சித் தலைவர்கள் ஒரு செயலியைத் தயாரித்துள்ளனர். இது மிகவும் மகிழ்ச்சியான நாள். நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு காங்கிரஸ் எளிய மக்களின் உதவியை நாடுவது இதுவே முதல்முறை.” என்றார்.
'தேசத்திற்காக நன்கொடை' மூலம், பொது மக்களின் உதவியை பெற்று, நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல பாடுபடுவோம். மகாத்மா காந்தியும் நாட்டு மக்களின் உதவியால் நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்தார். ஒரே ஒரு கட்சிதான் ஏழைகளுக்காகப் போராடுகிறது எனவும் அவர் கூறினார்.
www.donateinc.in என்ற இணையதளத்தின் மூலம் நன்கொடை அளிக்கலாம் என்றும், இது கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.inc.in இல் உள் இணைப்பாகவும் கொடுக்கப்பட்டுள்ளது என அஜய் மாக்கன் தெரிவித்தார். நன்கொடை கோரும் இணையதளம் கட்சி சார்பற்ற நபரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.