சாலை விபத்தில் சிக்கிய பத்திரிகையாளரை பதறிபோய் ஓடோடி மீட்ட ராகுல்... பரபரப்பு வீடியோ...!

Published : Mar 28, 2019, 09:52 AM ISTUpdated : Mar 28, 2019, 09:58 AM IST
சாலை விபத்தில் சிக்கிய பத்திரிகையாளரை பதறிபோய் ஓடோடி மீட்ட ராகுல்... பரபரப்பு வீடியோ...!

சுருக்கம்

டெல்லியில் சாலை விபத்தில் சிக்கிய பத்திரிகையாளர் ராஜேந்திர வியாஸ் என்பவரை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது காரில் அழைத்தக் கொண்டு மருத்துவமனையில் அனுமதித்தார். இந்நிலையில் ராகுல்காந்திக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளன. 

டெல்லியில் சாலை விபத்தில் சிக்கிய பத்திரிகையாளர் ராஜேந்திர வியாஸ் என்பவரை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது காரில் அழைத்தக் கொண்டு மருத்துவமனையில் அனுமதித்தார். இந்நிலையில் ராகுல்காந்தி பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளன.   

ராஜஸ்தான் மாநில பத்திரிகை ஒன்றின் உரிமையாளராக இருப்பவர் ராஜேந்திர வியாஸ். இவர் டெல்லி நகரில் உள்ள ஹுமாயூன் சாலை விபத்தில் சிக்கிக்கொண்டார். இதில் இவருக்கு நெற்றி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரத்த காயங்களுடன் துடித்துக் கொண்டிருந்தார். இதனை அவ்வழியாக காரில் சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கவனித்தார். 

உடனடியாக காரை நிறுத்துமாறு கூறிய ராகுல், காயமடைந்த பத்திரிகையாளரை தனது காரில் ஏற்றிக் கொண்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது ராகுல் காந்தியின் கார் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் வலியால் துடித்த பத்திரிகையாளரின் நெற்றியில் உள்ள ரத்தத்தை கைக்குட்டையால் துடைத்தவாறு அவர் ஆறுதல் கூறினார். இந்த காட்சிகளை முன்சீட்டில் அமர்ந்திருந்த ராகுலின் உதவியாளர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

 

பரபரப்பான தேர்தல் பணிகளுக்கு இடையில் ராகுலின் இந்த செயல்பாடு அனைத்து தரப்பிலும் பாராட்டப்பட்டு வருகின்றது. மேலும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

PREV
click me!

Recommended Stories

நாட்டின் முதல் வந்தேபாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
ஆன்லைனில் வாக்கி-டாக்கி விற்பனை.. பிளிப்கார்ட், மீஷோ உள்ளிட்ட 8 நிறுவனங்களுக்கு விழுந்த அடி!