மத்தியப் பிரதேசத்தில் அரசு சார்பில் நடந்த திருமண நிகழ்ச்சியில் ஆணுறைகள், கருத்தடை மாத்திரைகள் 'பரிசாக' வழங்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் அரசு சார்பில் நடந்த திருமண விழாவில் மணப்பெண்களுக்கு கொடுக்கப்பட்ட மேக்கப் கிட்டில் ஆணுறைகளும், கருத்தடை மாத்திரைகளும் இருந்துள்ளன. இந்த திருமண நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் பங்கேற்றதால் இந்த சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபுவா மாவட்டத்தில், அந்த மாநில அரசின் சார்பில் திருமண விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இது பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவின் கீழ் வரும் பெண்களுக்கான திருமண திட்டத்தின் கீழ் நடத்தப்பட்டது. சுமார் 296 ஜோடிகளுக்கு இந்த நிகழ்வில் திருமணம் நடந்தது. இதை முன்னிட்டு மணப்பெண்களுக்கு கொடுக்கப்பட்ட அழகு சாதன பெட்டிகளில் தான் ஆணுறைகளும், கருத்தடை மாத்திரைகளும் காணப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு திட்டத்தின் ஒரு பகுதியாகவே மணப்பெண்களின் அழகு சாதன பெட்டிகளில் ஆணுறைகளும் கருத்தடை மாத்திரைகளும் சுகாதாரத்துறை அதிகாரிகள் வைத்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: வைகாசி விசாகம் 2023: நினைத்த காரியம் நிறைவேற இப்படி விரதமிருந்தால் முருகபெருமான் அருளை வாரி வழங்குவார்!!
ஜாபுவா மாவட்ட ஆட்சியர் தன்வி ஹூடா கூறுகையில்,"பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தான் சுகாதாரத் துறை மூலம் ஆணுறைகள், கருத்தடை மாத்திரைகள் வழங்கப்பட்டன. "ஆணுறைகள் மற்றும் கருத்தடை மாத்திரைகள்" அழகு சாதன பெட்டிகளில் வைக்கப்படவில்லை. ஆனால் ஜோடிகளுக்கு தனித்தனியாக வழங்கப்பட்டது," என்றார். இந்த சம்பவத்திற்கு அம்மாநில காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: குரூப் புக்கிங் செய்த பின்னர் தனிநபரின் ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்வது எப்படினு தெரியுமா?