புது சர்ச்சை..ஹிஜாப் அணிந்தால் அனுமதி மறுப்பு.. விடாது போராடும் 6 மாணவிகள்..நடந்தது என்ன.?

By Thanalakshmi VFirst Published Jan 19, 2022, 6:32 PM IST
Highlights

கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரி நிர்வாகம், வகுப்புகளில் பாடம் நடத்தும் போது ஹிஜாப் ( புர்கா) அணிந்து வரக்கூடாது என்று தெரிவித்துள்ள முடிவை ஏற்காத காரணத்தால், 6 முஸ்லிம் மாணவர்களை மூன்று வாரங்களாக வகுப்புகளுக்குள் அனுமதிக்காமல் தடுக்கப்பட்டுள்ளனர்.
 

கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரி நிர்வாகம், வகுப்புகளில் பாடம் நடத்தும் போது ஹிஜாப் ( புர்கா) அணிந்து வரக்கூடாது என்று தெரிவித்துள்ள முடிவை ஏற்காத காரணத்தால், 6 முஸ்லிம் மாணவர்களை மூன்று வாரங்களாக வகுப்புகளுக்குள் அனுமதிக்காமல் தடுக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக விளக்கமளித்துள்ள கல்லூரி நிர்வாகம், கல்லூரி வளாகம் மற்றும் வகுப்பறைக்குள் நுழையும் போது ஹிஜாப் அல்லது புர்காக்களை அணிய அனுமதிக்கப்படுகிறது, ஆனால் வகுப்பு தொடங்கும் முன் அதனை அகற்ற வேண்டும் என தெரிவித்துள்ளது. 1985 ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டுவரும் பெண்களுக்கான சுடிதார் மற்றும் துப்பட்டா போன்ற ஆடைக் குறியீட்டைப் பின்பற்றுமாறும் முதல்வர் மாணவர்களிடம் தெரிவித்தார். தங்களது கல்லூரியின் சீருடை முறையில் வழக்கத்திற்கு மாறாக மாணவிகள் ஹிஜாப் அணிவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கல்லூரி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், கல்லூரியின் முடிவை எதிர்த்து 6 மாணவிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தங்களது மத சுதந்திரம் என்றும், தங்களது அடிப்படை உரிமை என்று மாணவிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.இதுக்குறித்து கல்லூரி முதல்வர் கூறுகையில், கல்லூரியில் பின்பற்றப்படும் சீருடையே அனைவருக்கும் பொதுவானது. இந்த சீருடை பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த அனைத்து மாணவிகளுக்கும் பொருந்தும். இது மாணவர் சேர்க்கையின்போதே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. கல்லூரி விவகாரங்களில் மதத்தை கொண்டு வரவேண்டாம்.மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட மாணவிகளின் பெரும்பாலான பெற்றோர்கள் கல்லூரியின் சீருடையை எதிர்க்கவில்லை. எனவே, ஹிஜாப் அணிய அனுமதிக்க வேண்டும் என்ற ஆறு மாணவிகளின் கோரிக்கையை ஏற்கும் பேச்சுக்கே இடமில்லை. அவர்களின் பெற்றோர்கள் கல்லூரியின் சீருடையை ஏற்கவில்லை என்றால், மற்றொரு கல்லூரியில் சேர்த்து கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கர்நாடக கல்வி அமைச்சர் பி.சி. நாகேஷ், "கல்லூரியின் இந்த உத்தரவால் 94 மாணவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை, தயவு செய்து ஆடைக் கட்டுப்பாட்டைப் பின்பற்றுங்கள்.1985 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 36 ஆண்டுகளாக கல்லூரியில் இந்த சீருடை பின்பற்றப்பட்டு வருகிறது. இதில் அதிகபட்ச முஸ்லிம் மாணவிகளுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை, தற்போது ஆறு பேருக்கு மட்டுமே பிரச்சினையாக உள்ளது” என்று கூறினார்.

இந்த சர்ச்சை வெடித்ததை அடுத்து, கோப்பா மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காவி நிற தாவணியை அணிந்து இந்து மாணவிகள் வகுப்புகளுக்கு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!