நகர்ப்புற மொபிலிடிக்கு சுற்றுச்சூழல் அமைப்பு, தொழில்நுட்பம், மாற்று வழிகள் முக்கியம் - சித்ரஜித் சக்கரவர்த்தி

By karthikeyan VFirst Published Jul 8, 2020, 5:24 PM IST
Highlights

நகர்ப்புற போக்குவரத்தை மேம்படுத்துவதில் 3 முக்கிய கூறுகள் உள்ளன என்று சித்ரஜித் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

பிபிசி குளோபலின் ஸ்மார்ட் சிட்டியின் ஒரு பிரிவான ஓ-சிட்டி, பொதுப்போக்குவரத்தின் செயல்திறனை மேம்படுத்த பல சிறப்பான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. கொரோனா வைரஸ் தனிமனித இடைவெளி என்ற விஷயத்தை கட்டாயமாக்கியுள்ள நிலையில், பொதுப்போக்குவரத்தில் டிஜிட்டல்மயமாக்குவதில், விசா ரெடியுடன் ஓ சிட்டி கைகோர்த்திருப்பது, மற்றுமொரு சிறந்த நடவடிக்கையாக அமைந்துள்ளது. இந்நிலையில், ஜிசிசி-யின் விற்பனை தலைவர் சித்ரஜித் சக்கரவர்த்தி, பொதுப்போக்குவரத்தின் எதிர்காலம் மற்றும் இந்தியாவில் போக்குவரத்தில் டிஜிட்டல்மயம் ஆகியவை குறித்து பேசியுள்ளார்.

1. நகர்ப்புற இயக்கத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் முக்கியவத்துவம் என்ன?

நகர்ப்புறங்கள் இடைவிடாது இயங்கிக்கொண்டிருக்கும். வேலைவாய்ப்பிற்காக கிராமங்களில் இருந்து மக்கள் நகரங்களுக்கு தொடர்ச்சியாக புலம்பெயர்ந்து வருவதால், நகர்ப்புற போக்குவரத்து கட்டமைப்பு பாதிக்கப்படுகிறது. நகர்ப்புறத்தை நோக்கிய புலம்பெயர்வு இதேவேகத்தில் சென்றால் 2030ல் உலக மக்கள் தொகையீல் 60% பேர் நகர்ப்புறங்களில் இருப்பார்கள். நகர்ப்புறங்களில் வளர்ந்துவரும் நடுத்தர குடும்பங்கள் தான் அதிகம் இருக்கிறார்கள். எனவே அவர்கள் அனைவரும் வாகனங்கள் வைத்திருப்பதால், போக்குவரத்து நெரிசல் அதிகமாகிறது. வாகனங்கள் அதிகரித்துவிட்ட நிலையில், நகர்ப்புறங்களில் ஏற்கனவே இருக்கும் போக்குவரத்து வசதிகளும் கட்டமைப்புகளும் கண்டிப்பாக போதாது. அதனால் தான், அரசாங்கங்கள், நகர்ப்புற இயக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. நகர்ப்புறங்களை கவர்ச்சிகரமாக கட்டமைத்து, நகர்ப்புற மக்களுக்கான வசதிகளை மேம்படுத்தி கொடுப்பதற்கான, புதிய தொழில்முறைகள் சோதனை செய்யப்படுவதுடன், புதிய தொழில்நுப்டங்களும் உருவாகிவருகின்றன. நிறைய தொழில்கள் டிஜிட்டலுக்கு மாறிவிட்டன. நகர்ப்புற இயக்கங்களும் டிஜிட்டல்மயமாவதற்கான தருணம் இது.

2. தடையற்ற, இனிமையான நகர்ப்புற இயக்கங்களை உருவாக்க, ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிகள், நிறுவனங்கள் ஆகியோர் கருத்தில்கொள்ள வேண்டிய முக்கிய காரணிகள் என்னென்ன?

நகர்ப்புற போக்குவரத்தை மேம்படுத்தும்போது 3 முக்கியமான விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும். 

முதலாவதாக, சுற்றுச்சூழல் அமைப்பு. அரசு மற்றும் தனியார் அமைப்புகள், ஒருங்கிணைந்த, தடையற்ற போக்குவரத்தை நகர்ப்புறங்களில் அமைத்து கொடுக்க வேண்டும். நகர்ப்புற இயக்கத்திற்கான சவால்களை எதிர்கொள்வது போக்குவரத்து ஆபரேட்டர்களின் பொறுப்பு மட்டுமல்ல. ஆட்சியாளர்கள், கண்டிப்பாக இந்த விஷயத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். நகர்ப்புற இயக்கம் என்பது கூட்டுப்பொறுப்பு.

இரண்டாவதாக தொழில்நுட்பம். நகர்ப்புற போக்குவரத்தை அதிநவீன முறையில் கட்டமைப்பதற்கான அருமையான வாய்ப்பை, தொழில்நுட்ப வளர்ச்சி வழங்குகிறது. பயணிகள் தங்களின் மொபைல் மூலமாகவே பயணத்தை சிறப்பாக திட்டமிடும் அனுபவத்தை வழங்குவதன் மூலம், தொழில்நுட்பத்தால் நகர்ப்புற டிராஃபிக்கை மேம்படுத்த முடியும். நகர்ப்புற பொதுப்போக்குவரத்து அமைப்புகள் டிஜிட்டல்மயமாகி கொண்டிருக்கின்றன. பேமெண்ட் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்க தேவையில்லாத சூழல் உருவாகியுள்ளது. ஸ்மார்ட் கார்டு, கியூஆர் கோட், ஃபேசியல் பேமெண்ட் ஆகியவற்றை பயன்படுத்தும் ஓபன் லூப் தொழில்நுட்பம், நகர்ப்புறங்களில் அதிவேகமாகவும், அதேவேளையில் கட்டுப்பாட்டுடனும் நகர்வதை உறுதி செய்கிறது.

மூன்றாவதாக, மாற்று வழிகள்.  ரயில், மெட்ரோ, பேருந்து, டிராம்வே ஆகியவற்றிற்கு இடையேயான இணைப்பின் மூலம் பயணிகளுக்கு சிறப்பான சேவையை அளிக்க முடியும். அதுமட்டுமல்லாது பகிரப்பட்ட சவாரி, மக்கள் விருப்பப்படும் பயண சேவையை அவர்களே தேர்வு செய்வதற்கான ஆப்சன்களையும் வசதிகளையும் வழங்குகிறது.

3. போக்குவரத்தை பொறுத்தமட்டில் இந்தியாவின் வளர்ச்சி எப்படி உள்ளது?

இப்போது இருக்கும் இதேவேகத்தில் நகரமயமாதல் அதிகரிக்கும் பட்சத்தில், இந்தியா கண்டிப்பாக பொதுப்போக்குவரத்தில் மாற்றம் செய்தே தீர வேண்டும். 2014ல் பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி, அவரது ஆட்சியில் நகர்ப்புறங்களை பொருளாதார ரீதியாகவும் கட்டமைப்பிலும் மேம்படுத்த ஸ்மார்ட் சிட்டி என்ற திட்டத்தை முன்னெடுத்தார். நாடு முழுவதும் 100 ஸ்மார்ட் சிட்டிகளை உருவாக்கவும், நகர்ப்புற வளர்ச்சிக்காகவும் தொடர்ச்சியாக நிதி ஒதுக்கினார். போக்குவரத்து உட்கட்டமைப்புகளை நவீனமயமாக்கும் பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. புதுப்புது போக்குவரத்து முறைகளும் வழிகளும் உருவாகியிருக்கின்றன. டெல்லி மெட்ரோ வெற்றிகரமாக செயல்பட்டதன் விளைவாக, இந்தியாவின் பல நகரங்களிலும் மெட்ரோ ரயில் சேவை செயல்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு அதிகமான முதலீடுகளுடன்  பெரும் சீர்திருத்தத்தை மேற்கொண்டுவருகிறது இந்தியா.  தமிழ்நாடு, குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் சிறந்து விளங்குகின்றன. நகர்ப்புற போக்குவரத்தில் அபரிதமான, அருமையான வளர்ச்சிக்கு அருகில் உள்ளது இந்தியா.

4. நகர்ப்புற போக்குவரத்து அமைப்பை டிஜிட்டல்மயமாக்குவதில் என்னென்ன சவால்கள் உள்ளன? அந்த சவால்களை ஓ-சிட்டி எப்படி சமாளிக்கப்போகிறது?

டெக்னிக்கலாக பார்த்தால், நிறைய மாநில அரசுகளின் போக்குவரத்து சேவையில் ஓபன் லூப் பிளாட்ஃபார்ம் இல்லாதது பெரிய சவால். கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு அல்லது எந்தவிதமான டிஜிட்டல் பேமெண்ட் முறையிலும் கட்டணத்தை செலுத்துவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும். அதற்காகத்தான் ஓ-சிட்டி, நிறைய பேமெண்ட் நெட்வொர்க்குகளுடன் கைகோர்த்துள்ளது. இதன்மூலம், பயணிகள் எந்தவிதமான டிஜிட்டல் பேமெண்ட் முறையையும் பயன்படுத்தலாம்.

நகர்ப்புற போக்குவரத்தின் டிஜிட்டல்மயம், தொழில்நுட்பத்தை விட, கலாச்சார மாற்றத்திற்கான குறியீடாகவும் அமைகிறது. தொழில்நுட்பம் சார்ந்தும், ஆபரேட்டர்கள் சார்பிலும், அரசு மற்றும் தனியார் அமைப்புகள், டிஜிட்டல்மயமாவது குறித்து ஊழியர்களுக்கும் ஓட்டுநர்களுக்கும் கற்பிக்க வேண்டும். பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு, இந்திய மக்கள் தினசரி தேவைகள், பணிகள், செயல்பாடுகள் ஆகியவற்றில் டிஜிட்டல் பேமெண்ட் முறையை பயன்படுத்த பழகிவிட்டனர். கூட்டு அணுகுமுறையை உறுதி செய்வதும் ஒரு சவால் தான். கொரோனா, நகர்ப்புற போக்குவரத்து கட்டமைப்பு குறித்து மறுபரிசீலனை செய்வதற்கான கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது. வெகுஜன போக்குவரத்து சந்தை கண்டிப்பாக டிஜிட்டல்மயத்தை நோக்கி விரைவான மாற்றத்தை காணும்.

5. நகர்ப்புற போக்குவரத்து இயக்கத்தில் ஓ-சிட்டியின் பார்வையும் நோக்கமும் என்ன?

டிஜிட்டல்மயமாவதன் மூலம் மொபைலில் ஸ்வைப் செய்து எளிமையாக பேமெண்ட் செய்து, வெவ்வேறு நகரங்களுக்கு இடையே இந்தியர்கள் பயணிக்க முடியும். போக்குவரத்து என்பது நகர்ப்புறங்களுக்கு இடையேயானது மட்டுமல்ல. நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு இடையேயான போக்குவரத்தும் முக்கியம். அதனால்தான், சிறு நகரங்களை சேர்ந்த மக்களுக்கும் சிறப்பான போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக சிறந்த தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்தித்தர உதவுகிறோம். போக்குவரத்து சந்தையில் சூப்பர் செயலிகள் நுழைகின்றன. போக்குவரத்து, சுற்றுச்சூழல் ஆகியவற்றை ஒரு செயலியின் மூலம் நிர்வகிக்க முடியும். கணிப்பு, பகுப்பாய்வு, நுண்ணறிவு ஆகியவை கண்டிப்பாக, போக்குவரத்து மாற்றங்களை ஏற்படுத்தி, மிகச்சிறப்பான பயணத்தை உறுதி செய்யும். 
 

click me!