மணிப்பூர் வன்முறையில் சீனா ஈடுபட்டுள்ளது என்று சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
சிவசேனா (யுபிடி) எம்பி சஞ்சய் ராவத் ஞாயிற்றுக்கிழமை, மணிப்பூரில் இனக்கலவரத்தில் சீனா ஈடுபட்டுள்ளதாகவும், மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த முயல்வதாகவும் கூறினார்.
மணிப்பூரில் வன்முறையைத் தூண்டுவதில் சீனா ஈடுபட்டுள்ளது என்றும், சீனாவுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மத்திய அரசிடம் பதில் அளிக்க வேண்டும் என்றும் சிவசேனா (யுபிடி) எம்பி சஞ்சய் ராவத் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “மத்தியிலும், வடகிழக்கு மாநிலத்திலும் பாஜக ஆட்சியில் உள்ளது. மே 3 முதல் இனக்கலவரம் நடந்துள்ளது. வன்முறையை முன்கூட்டியே திட்டமிட்டது யார்? என்று கேள்வி எழுப்பினார்.
மணிப்பூர் வன்முறையில் சீனா ஈடுபட்டுள்ளது. நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? 40 நாட்களுக்கும் மேலாக, வன்முறை தொடர்கிறது, மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் வாழ்கின்றனர். மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் பதவி விலக வேண்டும் என்று கூறினார்.
அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை.. விதிமுறைகள் என்னென்ன?