நீல வண்ணத்தில் ஆதார் அட்டை...! இது இவங்களுக்கு மட்டும் தான்...! மத்திய அரசின் புது திட்டம்...!

 
Published : Feb 26, 2018, 05:34 PM ISTUpdated : Sep 19, 2018, 02:00 AM IST
நீல வண்ணத்தில் ஆதார் அட்டை...! இது இவங்களுக்கு மட்டும் தான்...! மத்திய அரசின் புது திட்டம்...!

சுருக்கம்

central government is new project Aadar card in blue color

5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தனி நீல வண்ண ஆதார் அட்டையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. 

அரசின் பல்வேறு திட்டங்களுக்கும் ஆதார் கட்டாயம் என மத்திய அரசு திட்டத்தை தீட்டி வருகின்றது. பல்வேறு திட்டங்களின் பலன்களை பெறுவதற்கும், மொபைல் போன் எண், வங்கி கணக்கிற்கும் ஆதார் அவசியம் ஆக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க ஆதார் அட்டை கட்டாயம் என்ற நடைமுறை படிப்படியாக கொண்டு வரப்பட்டு வருகிறது. இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கும் ஆதார் அட்டையை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய அரசு ஒரு புது திட்டதினை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தனி ஆதார் அட்டையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

  • 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நீல வண்ணத்தில் ஆதார் அட்டை வழங்கப்பட உள்ளது. 
  • 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பயோ மெட்ரிக் தகவல்கள் தேவையில்லை. 
  • 5 வயது வரை இந்த ஆதார் அட்டையை பயன்படுத்தலாம். 
  • பால் ஆதார் பெற்ற குழந்தைகளுக்கு 5 வயது முடிந்த பிறகு அதனுடைய பயோமெட்ரிக் தகவல்களை ஆதாருடன் இணைக்க வேண்டும். 
  • பால் ஆதாரை பெற்றோரின் ஆதாருடன் இணைத்துக் கொள்ளலாம். அதே சமயம்  5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் வெளிநாட்டில் கல்வி பயில்வதற்கோ, அரசின் கல்விச்சலுகையை பெறுவதற்கோ ஆதாரை பதிவு செய்ய வேண்டும் என்ற கட்டாயமில்லை. 
  • குழந்தையின் 5, 10, 15 வயதுகளில் அவரின் பிறப்பு சான்றிதழ் மற்றும் பள்ளி அடையாள சான்றுடன், பயோமெட்ரிக் தகவல்களையும் இணைக்க வேண்டியது அவசியம். 

PREV
click me!

Recommended Stories

நாட்டுக்கு ஒரு மோடி போதுமா? ஹனுமான்–ராமன் உதாரணம்… மோடி பற்றி ஜெய்சங்கர் ஓப்பன் டாக்
அஸ்ஸாமை பாகிஸ்தானின் ஒரு பகுதியாக மாற்ற காங்கிரஸ் சதி செய்தது - பிரதமர் மோடி குற்றச்சாட்டு