Waqf Amendment Act 2025 : வக்ஃபு திருத்தச் சட்டம் 2025 இன்று ஏப்ரல் 8ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக, மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Waqf Amendment Act 2025 : வக்ஃபு திருத்தச் சட்டம் 2025 அறிவிக்கப்பட்டது: வக்பு திருத்தச் சட்டம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. ஏப்ரல் 5 அன்று ஜனாதிபதி மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார். இருப்பினும், இந்த சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு சவால் விடுக்கப்பட்டுள்ளன.
வக்ஃபு திருத்தச் சட்டம் 2025 அறிவிக்கப்பட்டது: மத்திய அரசு வக்பு திருத்தச் சட்டம் 2025ஐ உடனடியாக அமல்படுத்தியுள்ளது. வக்பு திருத்தச் சட்டம் ஏப்ரல் 8 முதல் அமலுக்கு வருவதற்கான அரசிதழ் அறிவிப்பை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மையுடன் மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்.
கல்விக்கு வந்த சோதனை!! பியூன் பல்கலைக்கழக தேர்வுத்தாள் திருத்தியதால் சர்ச்சை!
நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் நடைபெற்ற நீண்ட விவாதத்திற்கு பிறகு வக்ஃபு திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வக்ஃபு திருத்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தார். இதன் மூலமாக இந்த மசோதா சட்டமாகியிருக்கிறது. கடந்த 1981 ஆம் ஆண்டிற்கு பிறகு முதல் முறையாக நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் நீண்ட நேரம் நடந்த விவாதமாக இந்த வக்ஃபு மசோதா விவாதம் அரங்கேறியிருக்கிறது.
கடந்த் ஏப்ரல் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் விவாதம் நடந்து கடைசியாக 17 மணி நேரத்திற்கும் மேலாக இந்த விவாதம் நீடித்து புதிய சாதனையாக மாறியிருக்கிறது. முன் எப்போதும் இல்லாத வகையிலான விவாதமாக இந்த வக்ஃபு மசோதா திருத்த சட்டம் விவாதம் நாடாளுமன்றத்தில் அரங்கேறியிருக்கிறது. 17 மணிநேரத்திற்கும் மேலாக நீடித்து கடைசியில் 1981ல் நடந்த மிக நீண்ட விவாதம் என்ற சாதனையை இந்த வக்ஃபு மசோதா விவாதம் முறியடித்திருக்கிறது.
இந்தியாவின் கோடீஸ்வர எம்.எல்.ஏ எந்த கட்சி தெரியுமா? ஷாக் ஆயிடுவீங்க
மத்திய அரசு அரசிதழ் வெளியீடு
சட்டத்தின் பிரிவு 1(2)-ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, சட்டம் அமலுக்கு வரும் தேதியாக ஏப்ரல் 8, 2025 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் ஏப்ரல் 4-ம் தேதி சட்டத்தை நிறைவேற்றியது. அதன் பிறகு ஏப்ரல் 5-ம் தேதி ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். இருப்பினும், இந்த சட்டத்தின் அரசியலமைப்பு செல்லுபடியை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
ஆசிரியர்கள் நியமன ஊழல்! மேற்கு வங்க அரசுக்கு பெரும் நிம்மதி! உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு!