என்எஸ்இ ஊழல்: சித்ரா ராமகிருஷ்ணா ஆலோசகர் ஆனந்த் சுப்பிரமணியனை கைது செய்தது சிபிஐ

Published : Feb 25, 2022, 09:43 AM ISTUpdated : Feb 25, 2022, 10:29 AM IST
என்எஸ்இ ஊழல்: சித்ரா ராமகிருஷ்ணா ஆலோசகர் ஆனந்த் சுப்பிரமணியனை கைது செய்தது சிபிஐ

சுருக்கம்

தேசியப் பங்குச்சந்தையின் ரகசிய தரவுகளை பகிர்ந்த குற்றச்சாட்டு தொடர்பாக நடத்தப்பட்டு விசாரணையில் என்எஸ்இ முன்னாள்இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணாவின் ஆலோசகர் ஆனந்த் சுப்பிரமணியத்தை சிபிஐ அதிகாரிகள் நேற்று நள்ளிரவு கைதுசெய்தனர்.

தேசியப் பங்குச்சந்தையின் ரகசிய தரவுகளை பகிர்ந்த குற்றச்சாட்டு தொடர்பாக நடத்தப்பட்டு விசாரணையில் என்எஸ்இ முன்னாள்இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணாவின் ஆலோசகர் ஆனந்த் சுப்பிரமணியத்தை சிபிஐ அதிகாரிகள் நேற்று நள்ளிரவு கைதுசெய்தனர்.

சென்னையில் உள்ள இல்லத்தில் தங்கியிருந்த ஆனந்த் சுப்பிரமணியை கைது செய்த சிபிஐ அதிகாரிகள், விசாரணைக்காக டெல்லி அழைத்துச் செல்கின்றனர். என்எஸ்இ பங்குவிவரங்களை சாமியாருக்கும், பல்வேறு நிறுவனங்களுக்கும்பகிர்ந்தது தொடர்பாக கடந்த 2018ம் ஆண்டில் வ ழக்குப்பதிவு செய்யப்பட்டு நடந்து வரும் கோ-லொகேஷன் வழக்கில் முதல் கைது நடந்துள்ளது.

தேசிய பங்கு சந்தையின் தலைமை செயல் அதிகாரியாக 2016ம் ஆண்டுவரை சித்ரா ராமகிருஷ்ணா இருந்தபோது, தலைமை செயல் அதிகாரியின் ஆலோசகர் என்ற மிக முக்கிய பதவிக்கு ஆனந்த் சுப்ரமணியன் நியமிக்கப்பட்டார். இவருக்கும் இந்தப்பதவிக்கும் சற்றும் தொடர்பில்லாதவர், அனுபவம்இல்லாதவர் என்று கூறப்பட்டது. ஆனந்த் சுப்பிரமணியன் நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்தன என்றும்  ஆண்டுக்கு 3 முறை ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு, ரூ.2.31 கோடியாக அதிகரிக்கப்பட்டது என்றும் புகார்கள் வந்தன.

இது குறித்து பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்புான செபி விசாரணை நடத்தியதில் சித்ரா ராமகிருஷ்ணா, கடந்த 20 ஆண்டுகளாக இமயமலையில் உள்ள ஒரு சாமியாரின் ஆலோசனையின்படிதான் என்எஸ்இ அமைப்பை நடந்தியுள்ளதும் அவரின் அறிவுரைகள், கட்டளைப்படிதான் தேசியப் பங்குச்சந்தையையும் நடத்தியதும் தெரியவந்தது

தேசியப் பங்குச்சந்தைக்கு ரூ.5 கோடிவரை இழப்பு ஏற்படுத்தியது, விதிமுறைகளைப் பின்பற்றாதது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை சித்ரா ராமகிருஷ்ணா செய்ததை செபி கண்டுபிடித்தது. இதையடுத்து, முன்னாள் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ரூ.3 கோடியும், முன்னாள் செயல் அதிகாரி ரவி நரேன், ஆலோசகர் ஆனந்த் சுப்ரமணியன், ஆகியோருக்கு தலா ரூ.2 கோடியும் அபராதமாக செபி விதி்த்தது

இதற்கிடையே என்எஸ்இ தொடர்பான ரகசிய ஆவணங்களை பங்குச்சந்தையில் பட்டியலிடுவதற்கு முன்பே, என்எஸ்இ சர்வர்களை வைத்திருக்கும் கோ-லொகேஷனில் இருந்து  சில நிறுவனங்களுக்கு தகவல்களை அளித்து, அதன் மூலம் கோடிக்கணக்கில் ஆதாயத்தை சித்ரா ராமகிருஷ்ணா, ஆனந்த் சுப்பிரமணியன் பார்த்திருக்கலாம் என்று செபி குற்றம்சாட்டுகிறது. இது தொடர்பாக கடந்த 2018ம் ஆண்டில் சில நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிபிஐ விசாரணை நடத்தி வந்தது.  

இதன் அடிப்படையில் சித்ரா ராமகிருஷ்ணா, ஆனந்த் சுப்பிரமணியன் ஆகியோர் வீடுகளில் கடந்த வாரம் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.சித்ரா ராமகிருஷ்ணா வெளிநாடு தப்பிச்செல்லாமல் இருக்க  சிபிஐ சார்பில் லுக்அவுட் நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டது.

இந்த கோ-லொகேஷன் விவகாரம் தொடர்பாக சிபிஐ ஆனந்த் சுப்பிரமணியத்திடம் விசாரணை நடத்திவந்தது. இதில் சிபிஐ அதிகாரிகளுக்குஆனந்த் சுப்பிரமணியன் போதுமான ஒத்துழைப்பு தரவில்லை, இமயமலையில் இருக்கும் சாமியார் தொடர்பான கேள்விகளுக்கும் ஆனந்த் பதில்அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

 இதையடுத்து, சென்னையில் தங்கியிருந்த ஆனந்த் சுப்பிரமணியத்தைநேற்று இரவு கைது செய்தனர். இன்றுகாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் டெல்லிக்கு விசாரணைக்காக அழைத்துச்செல்ல உள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இண்டிகோ பயணிகளுக்கு ரூ.610 கோடி ரீஃபண்ட்! உன்னிப்பாக கண்காணிக்கும் மத்திய அரசு!
செய்த பாவத்திற்குப் பிராயச்சித்தம்.. திருப்பதி திருட்டு வழக்கில் ரவிக்குமார் வாக்குமூலம்!