
உத்தரபிரதேசத்தில் கர்ப்பிணிப் பெண் மீது கார் மோதியதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம், நொய்டா செக்டார் 18 பகுதியில், 18 வயதுக்கும் குறைவான சிறுவன் ஒருவன் காரை ஓட்டி வந்துள்ளான். அப்பகுதியில் காரை பார்க்கிங் செய்ய அந்த சிறுவன் முயன்றுள்ளான்.
காரை பார்க்கிங் செய்யும்போது அங்கு 7 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் இருந்துள்ளார். இதனை பார்க்காத அந்த சிறுவன், காரை அவர் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில், கர்ப்பிணிப் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தார், சிறுவன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் துறையிடம் கூறி வருகின்றனர்.