
மியான்மரில் இருந்து இன்று யங்கூனுக்கு 100-க்கும் ேமற்பட்ட ராணு வீரர்கள், அவர்கள் குடும்பத்தாருடன் புறப்பட்ட ராணுவ விமானம் அந்தமான் கடலில் விழுந்தது. இதில் விமானத்தில் இருந்த அனைவரும் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ராணுவ விமானம்
மியான்மர் நாட்டில் மியீக் நகரில் இருந்து ஒய்-8எப்.200 என்ற ராணுவ சரக்கு விமானம் யாங்கூன் நகருக்கு இன்று காலை புறப்பட்டது. இந்த விமானம் 4 எஞ்சின் பொருத்தப்பட்ட, சீனாவைச் சேர்ந்த பழைய மாடல் விமானமாகும். கடந்த மார்ச் மாதம் இந்த விமானம் வாங்கப்பட்டு, 809 மணிநேரங்கள் இயக்கப்பட்டுள்ளது.
100-க்கும் மேற்பட்டோர்
விமானத்தில் 100 ராணுவ வீரர்கள், அவர்களின் குடும்பத்தார், குழந்தைகள் 12-க்கும்மேற்பட்டோர் என 116 பேர் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது.
தொடர்பில் விலகியது
விமானம் தரையில் இருந்து 18 ஆயிரம் அடி உயரத்தில், அந்தமான் கடற்கரை பகுதியும், மியான்மரின் தென்கடல்பகுதிக்கு மேலாக நண்பகல் 1.45 மணிக்கு பறந்து கொண்டு இருந்தது. இந்நிலையில் திடீரென விமானம் கட்டுப்பாட்டு அறையின் தொடர்பில் இருந்து துண்டாகியது.
தேடுதல் வேட்டை
இதையடுத்து, கட்டுப்பாட்டு அறையில் இருந்து பல முறை விமானத்தை தொடர்பு கொண்டு சிக்னல் கிடைக்கவில்லை. இதையடுத்து, கடைசியாக சிக்னல் கிடைத்த பகுதியில் தேட அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டது.
கடலில் பாகங்கள்
இதையடுத்து, 4 கப்பல்கள், 2 விமானப்படை விமானங்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டன. இந்நிலையில், மியான்மரின் வர்த்தக நகரான தவேய் நகரில் இருந்து 218 கி.மீ தொலைவில் உள்ள கடற்கரைப் பரப்பில் விமானத்தின் நொறுங்கிய பாகங்கள் மிதப்பதை கண்டுபிடித்தனர். இந்த தகவலை மியீக் நகர சுற்றுலாத்துறை அதிகாரி நயிங் லி ஜாவும், கடற்படை அதிகாரிகளும் உறுதி செய்தார்.
இந்நிலையில் விமானத்தில் பயணம் செய்தவர்களை தேடும் பணியில் ராணுவத்தினர், கடற்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.