ரத்து செய்யப்பட்ட அரசு தேர்வு.. விண்ணப்பித்தவர்கள் கடும் அதிர்ச்சி!!

By Asianet TamilFirst Published Sep 6, 2019, 4:05 PM IST
Highlights

பி.எஸ்.என்.எல் நிறுவனம் வெளியிட்டிருந்த பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை ரத்து செய்திருப்பதால் விண்ணப்பித்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் காலியாக இருக்கும் 180 ஜுனியர் டெலிகாம் ஆபிசர் பணியிடங்களை நிரப்ப கடந்த பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி அதற்கு பலர் விண்ணப்பித்திருந்தனர். கேட் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மார்ச் மாதத்திலேயே விண்ணப்பிக்கும் தேதி முடிந்து விட்டது. விண்ணப்பித்தவர்கள் தேர்வுக்கான தேதி அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் தேர்வினை ரத்து செய்து தற்போது பி.எஸ்.என்.எல் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

காலியிடங்கள் நிரப்படாத நிலையில் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் விண்ணப்பித்து தேர்விற்காக காத்திருந்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதற்கு பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் ஏற்பட்டிருக்கும் கடுமையன நிதி நெருக்கடியே காரணம் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் 13 இடங்கள் நிரப்பப்பட இருந்தது.

நிதி நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் 80  ஆயிரம் ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க இருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

click me!