booster dose: பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் தனியார் மருத்துவமனைகள் எவ்வளவு கட்டணம் வசூலிக்கலாம்?

Published : Apr 09, 2022, 04:04 PM IST
booster dose: பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் தனியார் மருத்துவமனைகள் எவ்வளவு கட்டணம் வசூலிக்கலாம்?

சுருக்கம்

booster dose: 18வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் வரும் ஏப்ரல் 10ம் தேதி முதல் கொரோனாவுக்கு எதிரான பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளநிலையில் தனியார் மருத்துவமனை வசூலிக்கும் கட்டண விவரத்தை அ்றிவித்துள்ளது.

18வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் வரும் ஏப்ரல் 10ம் தேதி முதல் கொரோனாவுக்கு எதிரான பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளநிலையில் தனியார் மருத்துவமனை வசூலிக்கும் கட்டண விவரத்தை அ்றிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி

கடந்த ஆண்டு ஜனவரி 16ம் தேதி கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. முதலில் முன்களப்பணியாளர்களுக்கும், மருத்துவர்களுக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டு, பின்னர் 40வயதினருக்கு மேற்பட்டோருக்கு விரிவுபடுத்தப்பட்டது. அதன்பின் 18வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக அரசு சார்பில் செலுத்தப்பட்டது.

இந்நிலையில் கொரோனா அலையின் தீவிரம் அதிகரித்ததைத் தொடர்ந்து பூஸ்டர் தடுப்பூசியை மத்திய அரசு கொண்டுவந்தது. முதலில் முன்களப்பணியாளர்களும், மருத்துவர்களும் 60வயதுக்கு மேற்பட்டவர்களும் செலுத்த முன்னுரிமை அளிக்கப்பட்டனர். அதன்பின் 45  வயதுக்கு மேற்பட்ட இணை நோய்கள் இருப்பவர்கள் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டது.

15 வயது

அதன்பின் 15 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும்  தடுப்பூசி செலுத்தப்பட்டு இதுவரை 185 கோடி டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. இதன்படி 15 வயதுக்கு மேற்பட்ட 96 சதவீத பேர் முதல் டோஸ் தடுப்பூசியும், 83 சதவீத பேர் 2-வது டோஸ் தடுப்பூசியும் செலுத்தி கொண்டுள்ளனர்.

மத்திய அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் 18 வயது நிரம்பிய அனைவரும் பூஸ்டர் தடுப்பூசியை வரும் 10ம் தேதி முதல் செலுத்திக்கொள்ளலாம். தனியார் மருத்துவமனைகளில் செலுத்திக்கொள்ளவும் மத்திய அரசு அனுமதியளித்துள்ளது ஆனால், 2-வது தடுப்பூசி செலுத்தி 9 மாதங்களுக்குப்பின்புதான் பூஸ்டர் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியது.

ரூ.150 மட்டும்

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் அசோக் பூஷான் நேற்று நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
18வயது நிரம்பிய அனைவரும் வரும் 10ம் தேதி முதல்பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி செலுத்தலாம். தடுப்பூசி செலுத்தும் சேவைக் கட்டணமாக தனியார் மருத்துவமனைகள் அதிகபட்சமாக ரூ.150 மட்டுமே வசூலிக்க வேண்டும். தடுப்பூசி மருந்தின் விலையிலிருந்து அதிகபட்சமாக ரூ.150 மட்டுமே சேவைக்கட்டனம் வசூலிக்க வேண்டும். 

கட்டாயம்

இந்த பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கு எந்தவிதமான முன்பதிவும் தேவையில்லை. ஏற்கெனவே கோவின் தளத்தில் பதிவு செய்து 2 டோஸ்களை முடித்திருப்பதால் புதிதாக பதிவு செய்யத்தேவையில்லை. ஆனால் தனியார் மருத்துவமனைகள் கோவின் தளத்தில் ஆன்லைனில் முன்பதிவு செய்து தடுப்பூசி செலுத்திக்கொண்டார்களா அல்லதுநேரடியாக மருத்துமனைக்கு வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டார்களா என்பதை பதிவு செய்ய வேண்டும். 
இவ்வாறு அசோக் பூஷான் தெரிவித்தார்
 

PREV
click me!

Recommended Stories

H-1B visa: இந்திய குடும்பங்களை பிரிக்கும் டிரம்ப் உத்தரவு.! ஆளுக்கொரு நாட்டில் வசிக்கும் தம்பதிகள்.!
Shivraj Patil: முன்னாள் உள்துறை அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான சிவ்ராஜ் பாட்டீல் காலமானார்