கூடுதல் தடுப்பூசிக்கு இது தேவையில்லை... மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு!!

Published : Dec 28, 2021, 05:42 PM ISTUpdated : Dec 28, 2021, 05:44 PM IST
கூடுதல் தடுப்பூசிக்கு இது தேவையில்லை... மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு!!

சுருக்கம்

60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மருத்துவ சான்றிதழ் அவசியம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மருத்துவ சான்றிதழ் அவசியம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா என்னும் கொடிய வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதை அடுத்து கொரோனாவை தடுக்க தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு அதனை மக்களுக்கு செலுத்தும் பணி துரிதபடுத்தப்பட்டது. அந்த வகையில் மார்ச் 1 ஆம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோயாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. அதேநேரம் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இந்நிலையில் மே 1 ஆம் தேதி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், 12 முதல் 18 வயதுக்கு உள்பட்ட சிறாருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதி வழங்கியுள்ளார். இதற்கிடையே கொரோனா பரவலை தடுக்க 15 முதல் 18 வயது வரையுள்ள சிறுவர், சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 3 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உலக நாடுகள் பலவும் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்திக் கொண்டிருந்தன.

ஆனால் இந்தியாவில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் குழந்தைகளுக்கு எப்போது தான் தடுப்பூசி கிடைக்கும் என இந்திய பெற்றோர்கள் ஏங்கி கொண்டிருந்தனர். அந்த ஏக்கத்தை பிரதமர் மோடியின் அறிவிப்பு போக்கியது. ஜனவரி 3 ஆம் தேதி முதல் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என பிரதமர் தெரிவித்திருந்தார். சிறுவர்களுக்கு கோவாக்சின் மட்டுமே செலுத்தப்படும். கோவிஷீல்டுக்கு அனுமதி கொடுக்கவில்லை. இச்சூழலில் ஜனவரி 1ஆம் தேதி முதல் கோவின் வலைதளத்தில் முன்பதிவு செய்யலாம் என மத்திய சுகாதார துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

பள்ளி ஐடி கார்டு மூலம் முன்பதிவு செய்யலாம் எனவும் கூறியுள்ளது. முதல்கட்டமாக மருத்துவப் பணியாளர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும், இணை நோய் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த நிலையில், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மருத்துவ சான்றிதழ் அவசியம் இல்லை என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. மருத்துவரின் ஆலோசனை பெற்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 முதல் 18 வயது வரையுள்ள சிறுவர், சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 3 ஆம் தேதியும் ஜன.10 ஆம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியும் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

Expensive Egg: ஒரே ஒரு முட்டை விலை ரூ.25,000..! அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா..?
LPG Scam Alert: Indane & HP Gas Alert: ஆன்லைன் கேஸ் புக்கிங்கில் நடக்கும் நூதன மோசடிகள்..!