பிரதமர் தலைமையில் பாஜக ஆட்சிமன்ற குழு – ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்ய முடிவு!!

 
Published : Jun 19, 2017, 12:47 PM ISTUpdated : Sep 19, 2018, 12:46 AM IST
பிரதமர் தலைமையில் பாஜக ஆட்சிமன்ற குழு – ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்ய முடிவு!!

சுருக்கம்

bjp arranged a metting to select president candidate

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை தேர்வு செய்ய பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் பாஜக ஆட்சி மன்ற குழு கூட்டம் தொடங்கியது. இதில் பாஜக தலைவர் அமித்ஷா, அமைச்சர்கள் வெங்கையாநாயுடு, சுஷ்மா சுவராஜ் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் ஜூலை மாதத்துடன் முடிவடைகிறது. இந்நிலையில் அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்பதில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன.

இதையடுத்து அடுத்த ஜனாதிபதி யார் என்பதற்கான தேர்தல் ஜூலை 17 ஆம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14 ஆம் தேதி தொடங்கியது.

ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை தேர்வு செய்ய பாஜக தரப்பிலும் காங்கிரஸ் தரப்பிலும் குழு அமைக்கப்பட்டுள்ளன.

பாஜக தரப்பில் அமைக்கப்பட்ட ராஜ்நாத்சிங், வெங்கையாநாயுடு, அருண்ஜெட்லி ஆகிய 3 பேர் கொண்ட குழு காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தியை சந்தித்து ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதனிடையே மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் பொதுவேட்பாளரை நிறுத்துவதற்காக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமையில் பல முறை உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

இந்நிலையில் பாஜக வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்வற்கான ஆட்சி மன்ற குழு கூட்டம் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று தொடங்கியது. இதில், இதில் பாஜக தலைவர் அமித்ஷா, அமைச்சர்கள் வெங்கையாநாயுடு, சுஷ்மா சுவராஜ் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

இந்திய வீரர்களுக்கு 'அந்த' பழக்கவழக்கம்! எனது கணவர் ஒழுக்கமானவர்.. ஜடேஜா மனைவி பகீர் குற்றச்சாட்டு!
பாகிஸ்தானின் டுபாக்கூர்தனம்..! ஏஐ டீப்ஃபேக் வீடியோக்கள் மூலம் போலியாக போரை உருவாக்கிய கடற்படை..!