பெங்களூருவைச் சேர்ந்த நாய் ஆர்வலர் சதீஷ், 50 கோடி ரூபாய் கொடுத்து உலகின் மிக விலையுயர்ந்த நாயை வாங்கியுள்ளார். வுல்ஃப்டாக் என்ற அந்த நாய் ஓநாய் மற்றும் காகசியன் ஷெப்பர்ட் கலப்பினம்.
பெங்களூருவைச் சேர்ந்த நாய் வளர்ப்பு ஆர்வலர் எஸ். சதீஷ் உலகின் மிக விலையுயர்ந்த நாயை வாங்கியுள்ளார். இந்த நாயின் பெயர் வுல்ஃப்டாக். இதன் விலை ரூ.50 கோடி. இதுவே உலகின் மிகவும் விலையுயர்ந்த நாய் என்று கூறப்படுகிறது.
இந்த வகையில் இதுதான் முதல் முதல் நாய். இது காட்டு ஓநாய் மற்றும் காகசியன் ஷெப்பர்ட் ஆகியவற்றின் கலப்பு இனமாகும். பெங்களூரு நாய் வளர்ப்பு ஆர்வலர் சதீஸ், கடபாம்ப் ஒகாமி என்று அழைக்கப்படும் இந்த அரிய வகை நாயை வாங்க சுமார் ரூ.50 கோடி செலவிட்டுள்ளார். இதனால், இந்த நாய் உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த நாய் என்று பெயர் பெற்றுள்ளது.
தி சன் பத்திரிகையில் வெளியான ஒரு செய்தியின்படி, 51 வயதான எஸ். சதீஷ் பிப்ரவரியில் இந்த நாயை வாங்கியுள்ளார். உலகின் அரிதான நாய் என்று அழைக்கப்படும் ஒகாமிக்கு எட்டு மாத வயதுதான் ஆகிறது. இதன் எடை 75 கிலோ மற்றும் நீளம் 30 அங்குலம்.
தனது புதிய செல்லப்பிராணியைப் பற்றி தி சன் பத்திரிகையிடம் பேசிய சதீஷ், "இது மிகவும் அரிதான நாய் இனம். ஒரு ஓநாய் போலவே தோற்றமளிக்கிறது. இந்த இனத்தைச் சேர்ந்த ஒரு நாய் முதல் முறையாக விற்கப்பட்டுள்ளது. இந்த நாய் இதற்கு முன் அமெரிக்காவில் வளர்க்கப்பட்டது. எனக்கு நாய்கள் மீது மிகுந்த ஆர்வம் இருப்பதால், தனித்துவமான நாய்களை வாங்கி இந்தியாவிற்கு கொண்டுவர விரும்புகிறேன். இந்த நாயை வாங்க ரூ.50 கோடி செலவிட்டேன்" எனக் கூறியுள்ளார்.
வலிமை மற்றும் அடர்த்தியான ரோமங்களுக்கு பெயர் பெற்ற காகசியன் ஷெப்பர்ட் நாய்கள் ஜார்ஜியா மற்றும் ரஷ்யா போன்ற குளிர் பிரதேசங்களிலிருந்து வசிக்கின்றன. அவை பொதுவாக ஓநாய்கள் போன்ற வேட்டையாடும் விலங்குகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக வளர்க்கப்படுகின்றன.
யார் இந்த எஸ். சதீஷ்?
பிரபல நாய் வளர்ப்பு ஆர்வலர் எஸ், சதீஷ் இந்திய நாய் வளர்ப்போர் சங்கத்தின் தலைவராக உள்ளார். பல வருடங்களுக்கு முன்பே நாய்களை வளர்ப்பதை நிறுத்திவிட்டாலும், தற்போது சதீஷ் தனது அரிய நாய்களை விலங்கு பிரியர்களுக்கு பரிசளிப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கிறார்.
30 நிமிட நிகழ்ச்சிக்கு 2,200 பவுண்டுகள் (ரூ. 2,46,705) கிடைக்கிறது என்றும் ஐந்து மணி நேர நிகழ்ச்சிக்கு 9,000 பவுண்டுகள் (ரூ. 10,09,251) சம்பாதிப்பதாகவும் சொல்கிறார் சதீஷ்.
வுல்ஃப்டாக் வாங்கியது பற்றிக் கூறியுள்ள சதீஷ், "இந்த நாய் அரிதானது என்பதால் நான் அதற்காக பணம் செலவிட்டேன்" என்கிறார். "எனக்குப் போதுமான பணம் கிடைக்கிறது. மக்கள் எப்போதும் நாய்களைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறார்ள். அவற்றுடன் செல்ஃபி எடுத்துக்கொள்கிறார்கள். ஒரு சினிமா நடிகரை விட நானும் என் நாயும் அதிக கவனத்தைப் பெறுகிறோம்" என்றும் பெருமிதத்துடன் கூறுகிறார்.
சதீஷ் தனது நாயை ஏழு ஏக்கர் பரப்பளவுள்ள பெரிய பங்களாவில் வளர்த்து வருகிறார். அந்த வீட்டில் மற்ற நாய் இனங்களும் வாழ்கின்றன. தனது செல்லப்பிராணிகளின் பாதுகாப்பிற்காக, அவர் தனது வீட்டைச் சுற்றி 10 அடி உயரத்திற்கு சுவர் எழுப்பியுள்ளார். 24/7 மணிநேரமும் இயங்கும் சிசிடிவி கண்காணிப்பையும் அமைத்துள்ளார்.