வங்கி வேலை நிறுத்தம் திடீர் ஒத்திவைப்பு ! நிம்மதி பெருமூச்சு விட்ட வாடிக்கையாளர்கள் !!

By Selvanayagam PFirst Published Sep 23, 2019, 10:52 PM IST
Highlights

வங்கிகள் இணைப்பைக் கண்டித்து வரும் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக வங்கி அதிகாரிகள்  அறிவித்திருந்த நிலையில் தற்போது அந்த போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகள் இணைப்பு, ஐந்து நாள் வேலை, வரைமுறையற்ற வேலை நேரத்தை முறைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 26 மற்றும் 27-ந்தேதி ஆகிய இரண்டு நாட்கள் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக வங்கி  ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டமைப்பு அறிவித்திருந்தது.

இதில் இந்த 26 மற்றும் 27 ஆகிய தேதிகளைத் தொடர்ந்து 28-ந்தேதி நான்காவது சனி, அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை என நான்கு நாட்கள் தொடர்ந்து வங்கி இயங்காத  சூழ்நிலை உருவாகும் நிலை இருந்தது.

மேலும் திங்கட்கிழமை வங்கிகள் அரையாண்டு கணக்கு முடிக்கும் நாள் என்பதால் அன்றும் வாடிக்கையாளர்கள் வங்கி சேவையை பயன்படுத்த முடியாத நிலை இருந்து வந்தது. இது மட்டும்மல்லாமல் காந்தி ஜெயந்தி விடுமுறை என தொடர் விடுமுறை என்பதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைநதிருந்தனர்.

இந்நிலையில் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக நிதித்துறை செயலாளர்  கூறியிருப்பதால் வேலை நிறுத்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.


தொடர் விடுமுறையால் தங்கள் வியாபாரம் பாதிக்கப்படுமோ என அச்சத்தில் இருந்த வணிகர்கள் மற்றும் பொது மக்கள் தற்போது நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

click me!