கடுகு எண்ணெய் போதும்... நாசியில் உறிஞ்சினால் கொரோனா போயே போச்சு... பாபா ராம்தேவின் அதிரடி யோசனை!

By Asianet TamilFirst Published Apr 26, 2020, 8:55 PM IST
Highlights

நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் இரண்டாம் கட்டமாக மே 3 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொற்றுநோய் பீதியிலிருந்து எப்போது விடுபடுவோம் என்று மக்கள் திண்டாடிவருகிறார்கள். இந்நிலையில் கொரோனா நோயைக் கட்டுப்படுத்தும் வழி ஒன்றை யோகா குரு பாபா ராம் தேவ் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

கடுகு எண்ணெயை மூக்கில் உறிஞ்சினால், கொரோனா வைரஸைக் கொல்லலாம் என்று யோகா குரு பாபா ராம்தேவ் சர்ச்சைக்குரிய யோசனையைத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்றுநோய் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தவண்ணம் உள்ளது. நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் இரண்டாம் கட்டமாக மே 3 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொற்றுநோய் பீதியிலிருந்து எப்போது விடுபடுவோம் என்று மக்கள் திண்டாடிவருகிறார்கள். இந்நிலையில் கொரோனா நோயைக் கட்டுப்படுத்தும் வழி ஒன்றை யோகா குரு பாபா ராம் தேவ் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். 
கொரோனா வைரஸ் தொற்றுநோய் பாதிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள பாபா ராம்தேவ், “யாராவது ஒருவரால் ஒரு நிமிடத்துக்கு மூச்சைப் பிடித்துவைக்க முடியும் என்றால், அந்த நபர் கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை என்று அர்த்தம். மேலும் நாசி வழியாக கடுகு எண்ணெயை உறிஞ்சினால், அது வயிற்றுக்குள் சென்று அமிலங்கள் மூலமாக கொரோனா வைரஸை முழுமையாக அழித்துவிடும்” எனத் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று நோயிக்கு மருந்து இல்லாமல் உலகே திண்டாடிவரும் வேளையில், கொரோனா வைரஸை கடுகு எண்ணெய் மூலம் கொல்லலாம் என்று பாபா ராம்தேவ் கூறியிருப்பது சர்ச்சையாகியிருக்கிறது. பாபா ராம்தேவின் கருத்தை பலரும் விமர்சித்துவருகிறார்கள்.

click me!