"பாகிஸ்தான் ஒரு தலையை வெட்டினா… நாம் 100 தலைய வெட்டணும்" - கொந்தளிக்கும் பாபா ராம்தேவ்

First Published May 5, 2017, 2:16 PM IST
Highlights
baba ramdev angry speech on pakistan issue


இந்திய ராணுவ வீரர் ஒருவரின் தலை வெட்டப்பட்டால், பாகிஸ்தான் வீரர்களின் 100 தலைகளை நாம் வெட்டி எறிய வேண்டும் என பாபா ராம் தேவ் ஆவேசமாக பேசினார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள இந்திய எல்லைப் பகுதியான கிருஷ்ணா கதிக்குள் 250 மீட்டர் தூரம் வரை ஊடுருவி வந்த பாகிஸ்தான் சிறப்பு படையினர் திடீரென இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தினர். 

அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நயீப் சுபேதார் பரம்ஜீத் சிங், தலைமை காவலர் பிரேம் சாகர் ஆகிய இரு எல்லை பாதுகாப்பு படை வீரர்களையும் சுட்டுக் கொன்று அவர்களது தலையை துண்டித்து உடல்களை சிதைத்துள்ளனர்.

இந்த சம்பவம் இந்திய ராணுவத்தை கடும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது வைத்தது. இதையடுத்து பாகிஸ் தானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ராணுவ அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். 

இது குறித்து செய்தியாளர்களிடம் செய்தியாளர்களிடம் பேசிய  இந்திய  ராணுவ தளபதி பிபின் ராவத் இந்திய வீரர்களைகொன்று சிதைத்த பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  எதிர்காலத்தில் எடுக்கப்படும் இந்த நடவடிக்கைகள் குறித்து தற்போது கூற முடியாது என தெரிவித்தார்.

நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த பிரச்சனை குறித்து பேசிய யோகா சாமியார் பாபா ராம்தேவ், இந்திய ராணுவ வீரர் ஒருவரின் தலை வெட்டப்பட்டால், பாகிஸ்தான் வீரர்களின் 100 தலைகளை நாம் வெட்டி எறிய வேண்டும் என ஆவேசமாக பேசினார்.

 

click me!