அயோத்தி ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழாவிற்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு - அறக்கட்டளை தகவல்

By Raghupati RFirst Published Jun 2, 2023, 4:37 PM IST
Highlights

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோவில் முழுவீச்சில் கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடியை அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை அழைக்கும் என்று கோயில் அறக்கட்டளை அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

வருகின்ற டிசம்பர் மாதம் கோவில் பக்தர்களுக்காக திறக்கப்படும் என்றும் அவர் கூறினார். புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்கு, புதிய ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும் விழாவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி அழைக்கப்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

ராமர் கோயில் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய், சமீபத்தில் நடந்த நிர்வாகக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று கூறினார். வருகின்ற அக்டோபருக்குள், கோவிலின் தரை தளம் முழுமையடையும் என்று ராய் கூறுகிறார். அதன் செயல்பாட்டின் சோதனையில் இரண்டு மாதங்கள் செலவிடப்படும் மற்றும் டிசம்பர் மாதத்திற்குள், அது பக்தர்களுக்கு திறக்கப்படும்.

மேலும் இந்திய பிரதமர் ,மோடிக்கு கடிதம் சமர்ப்பிக்கப்படும் என்றும், டிசம்பர் மற்றும் ஜனவரி 26, 2024 க்கு இடையில் ஏதேனும் பொருத்தமான தேதிக்கு சம்மதிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார். இந்த கடிதத்தில் ஸ்ரீராம் ஜனம்பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவர் மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் கையெழுத்திடுவார் என்று தெரிவித்தார்.

ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு, கோவில் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டு வழிபாடு மற்றும் பூஜைகள் மேற்கொள்ளப்படும். இந்த வாரம் அயோத்தியில் நடந்த கூட்டத்தில், 11 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கோயிலின் கருவறையில் சிலை பிரதிஷ்டை செய்வதற்கான தேதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்று ராய் கூறினார்.

கோயில் அறக்கட்டளையின் பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி, தேதிகள் குறித்து ஜோதிடர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறார். பொருத்தமான தேதிக்காக இதுவரை ஏழு ஜோதிடர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இதையும் படிங்க..சென்னை - இலங்கைக்கு சூப்பரான கப்பல் பயணம்.. ஒரு டிக்கெட் எவ்வளவு தெரியுமா?

இதையும் படிங்க..ஜூன் மாதத்தில் 12 நாட்கள் வங்கி விடுமுறை.. தமிழகத்தில் எத்தனை நாள் தெரியுமா?

click me!