தங்கள் பத்திரிக்கையாளர் பிஜி சுரேஷ் குமார் காங்கிரஸுடன் கூட்டுச் சேர்ந்து செயல்பட்டார் என்ற கேரள பாஜக தலைவர் கே. சுரேந்திரனின் குற்றச்சாட்டை ஏசியாநெட் நியூஸ் நிராகரித்துள்ளது. ஏசியாநெட் நியூஸ் செயல் தலைவர் ராஜேஷ் கல்ரா சுரேந்திரனின் கூற்றுக்கள் "தவறானவை", "கற்பனையானவை" என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.
தங்கள் பத்திரிக்கையாளர் பிஜி சுரேஷ் குமார் காங்கிரஸுடன் கூட்டுச் சேர்ந்து செயல்பட்டார் என்ற கேரள பாஜக தலைவர் கே. சுரேந்திரனின் குற்றச்சாட்டை ஏசியாநெட் நியூஸ் நிராகரித்துள்ளது. ஏசியாநெட் நியூஸ் செயல் தலைவர் ராஜேஷ் கல்ரா சுரேந்திரனின் கூற்றுக்கள் "தவறானவை", "கற்பனையானவை" என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.
கேரளா மாநிலம் பாலக்காட்டில் இடைத்தேர்தலுக்கு முன்னதாக நடைபெற்ற அரசியல் பரிவர்த்தனைகள் தொடர்பாக கேரள பாஜக தலைவர் கே சுரேந்திரன் பேஸ்புக்கில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், ஏசியாநெட் நியூஸ் உதவி நிர்வாக ஆசிரியரும் மூத்த செய்தியாளருமான பிஜி சுரேஷ் குமார் காங்கிரஸுடன் கூட்டு சேர்ந்தது செயல்பட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
undefined
இந்நிலையில், மூத்த செய்தியாளர் பிஜி சுரேஷ் குமாருக்கு எதிராக சுரேந்திரன் கூறிய கருத்துகளை ஏசியாநெட் நியூஸ் நிராகரித்துள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, ஏசியாநெட் நியூஸ் செயல் தலைவர் ராஜேஷ் கல்ரா ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.
அதில், சுரேந்திரனின் குற்றச்சாட்டு 'பொய்' என்று குறிப்பிட்டுள்ளார். இது சுரேந்திரனின் மனதில் உதித்த கற்பனை அல்லது வேண்டுமென்றே கூறப்பட்ட பொய் என்று ராஜேஷ் கல்ரா கூறியுள்ளார்.
"சமீபத்தில் பாஜக தலைவர் ஒருவர் காங்கிரஸுக்கு சென்றது தொடர்பாக எங்கள் நிறுவனத்தின் மூத்த பத்திரிகையாளர் பி.ஜி.சுரேஷ் குமார் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து செயல்பட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். திரு.சுரேந்திரன் புகழ்பெற்ற தேசியக் கட்சியான பிஜேபியின் தலைவர் என்பதால், அவருடைய குற்றச்சாட்டு குறித்து நான் முழுமையாக விசாரணை செய்தேன். திரு. சுரேந்திரனின் கூற்று முற்றிலும் தவறானது என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும்" என்று ராஜேஷ் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.
"ஏசியாநெட் நியூஸ் தன்னிகரில்லாத நம்பகத்தன்மையுடன் ஒரு தேசிய பிராண்டாக நிலைபெற்றுள்ளது. உலகம் முழுவதும் உள்ள எங்கள் சுமார் 100 மில்லியன் வாசகர்களுக்காக, ஊடகத்துறையில் மிக உயர்ந்த தரத்தை நிலைநிறுத்த நாங்கள் உறுதியாக இருக்கிறோம். பி.ஜி. சுரேஷ் குமார், ஏசியாநெட் நியூஸில் மிகவும் திறமையான, அச்சமற்ற செய்தியாளராக தனது பணியை எளிமையாகச் செய்துகொண்டிருக்கிறார். இது பரவலாக அங்கீகரிக்கப்பட்ட உண்மை. உண்மைதான் தோற்கடிக்க முடியாத சாம்பியன்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.