கோஹினூர் வைரம் இந்தியா திரும்ப வேண்டும்.. ட்விட்டரில் மன்னர் குடும்பத்தை விளாசும் நெட்டிசன்கள் !

By Raghupati RFirst Published Sep 9, 2022, 9:40 PM IST
Highlights

இங்கிலாந்து மகாராணியான ராணி எலிசெபத் (96), அங்குள்ள பக்கிங்காம் மாளிகையில் வசித்து வந்தார்.

இந்நிலையில், ராணி எலிசபெத்துக்கு இன்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, மகாராணியின் அதிகாரப்பூர்வன மருத்துவக் குழுவினர் ராணிக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ராணி எலிசபெத் காலமானார். இங்கிலாந்து மகாராணி எலிசெபத் காலமானது அந்நாட்டில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ராணி எலிசபெத்தின் உடல் நல்லடக்கம் 10 நாட்களுக்கு பின் நடைபெறும். இந்நிலையில் பிரிட்டன் மகாராணி எலிசபெத் மறைவுக்கு பிறகு அவரது மகன் இளவரசர் சார்லஸ் பிரிட்டன் மன்னராகியுள்ளார். அத்துடன் அவரது மனைவி கமிலா ராணியானார். இதன் மூலம் விலை உயர்ந்த கோஹினூர் வைரம் பொருத்தப்பட்ட கிரீடம் கமலாவசம் சென்றுள்ளது. 

மேலும் செய்திகளுக்கு..வரலாற்று சாதனை படைத்து மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத்.. எப்படி தெரியுமா?

ஆங்கிலேயர்கள் ஆட்சியின்போது இந்தியாவில் இருந்து கோஹினூர் வைரம் இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்பட்டது. 21 கிராம் எடை கொண்ட 105 காரட் கோஹினூர் வைரம் ராணியின் கிரீடத்தில் உள்ளது. இதை கடந்த 70 ஆண்டுகளாக இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபத் பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது அவர் மறைவை ஒட்டி கமிலா வசம் செல்கிறது. கோஹினூர் என்பது வரலாற்றில் முக்கியமான 105.6 காரட் வைரமாகும். 

இந்த வைரமானது 14 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. பல நூற்றாண்டுகளாக பல மன்னர்கள் கைகளில் மாறி, 1849 ஆம் ஆண்டில், பஞ்சாப்பை ஆங்கிலேயர் கைப்பற்றிய பிறகு, வைரம் விக்டோரியா மகாராணியிடம் ஒப்படைக்கப்பட்டது. அதை வெட்டி இங்கிலாந்தின் அரச மகுடத்தின் சிறப்பாக சேர்த்தனர். அப்போதிருந்து, இது ஆங்கிலேயர்களின் கிரீடத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. எலிசபெத் II தனது தந்தை கிங் ஜார்ஜ் VI இன் மரணத்தைத் தொடர்ந்து பிப்ரவரி 6, 1952 அன்று 25 வயதில் அரியணை ஏறினார். 

மேலும் செய்திகளுக்கு..Kohinoor Crown : ராணி எலிசபெத்தின் வைர கிரீடத்தை அணியப் போகிறவர் யார்?

அப்போது இந்த கிரீடம் ஜார்ஜ் VI இடம் இருந்து எலிசபத் மகாராணிக்கு மாறியது. இப்போது அவரது மருமகளுக்கு கைமாற உள்ளது. கோஹினூர் வைரமானது 1937 ஆம் ஆண்டு ஆறாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு பிறகு ராணி எலிசபெத்துக்காக உருவாக்கப்பட்ட பிளாட்டினம் கிரீடத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இது இப்போது லண்டன் கோபுரத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்குத் திரும்பக் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் எழுப்பியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..500 மில்லியன் டாலர் சொத்து.. பாஸ்போர்ட் இல்லாமலே வெளிநாடு போகலாம் - மன்னர் சார்லசுக்கு இவ்வளவு வசதிகளா ?

click me!