
கடந்த சில மாதங்களுக்கு முன் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதானார்.
பின் அவர் எந்த பிரச்சனையில் சிக்கவில்லை என அவரை விடுதலை செய்தார்கள். அதில் இருந்து ஜெயிலில் சில நாட்கள் இருந்த ஆர்யன் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும், ஷாருக் கான் குடும்பத்தினர் அவரை கூடவே இருந்து கவனித்து வருகிறார்கள் என்றும் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் ஜெயிலில் இருந்து வெளியே வந்த பிறகு முதன்முறையாக ஆர்யன் கான் வெளியே வந்துள்ளார். ஐபிஎல் ஆக்ஷன் 2022ம் ஆண்டிக்கான வீரர்களை தங்களது அணிக்கு ஏலம் எடுக்க தனது தங்கை சுஹானா கானுடன் வந்துள்ளார்.
அவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் இப்போது வைரலாகி வருகிறது. இவர்கள் ஷாருகானிற்க்கு பதிலாக இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஷாருகான் மற்றும் அவரது நடிகரும் நண்பர் ஜூஹி சாவ்லா ஆகியோருக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.