
உள்நாட்டில் உள்ள பல்வேறு உணவு வகைகளில் என்ன சத்துக்கள் இருக்கின்றன, எவ்வளவு சாப்பிடலாம் என்பது குறித்த தகவல்களை அளிக்கும் "ஆப்ஸை"(செயலி) மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
இதற்கான செயலியை உருவாக்கி வரும் தேசிய சத்துணவு நிறுவனம் , தனது பணிகளில் இறுதிக்க ட்டத்தை எட்டிவிட்டதால், விரைவில் மக்களுக்கு அறிமுகம் செய்யப்படும் என அதன் இயக்குநர் டி. லாங்வா.
இது குறித்து தேசிய சத்துணவு நிறுவனத்தின் இயக்குநர் டி லாங்வா டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில், "நாட்டில் உள்ள அனைத்து மக்களும் தங்களுக்கு விருப்பமான உணவின் பெயர், அளவு குறித்து இந்த செயலியில் பதிவு செய்தால், எவ்வளவு சாப்பிடலாம், அதில் கலோரி என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
உதாரணமாக, ஒருவர் இட்லி சாப்பிட நினைத்தால், தனது வயது, எடை , இட்லி குறித்து டைப் செய்தால், எத்தனை இட்லி சாப்பிடலாம், எவ்வளவு கலோரி தேவை என்பதை அது தெரிவிக்கும். இதே போல அனைத்து இந்திய உணவு வகைகளின் கலோரிகள், சத்துக்கள், குறித்தும் தெரிந்து கொள்ளலாம். முதல்கட்டமாக 538 வகையான உணவு வகைகளின் கலோரிகள், பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
நாட்டை 6 முக்கியப் பகுதிகளாப் பிரித்து, அந்த பகுதியில் இருக்கும் உணவுகள் குறித்து பட்டியல் எடுக்கப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், காய்கறிகள், இறைச்சிகள், பருப்புகள், உலர் பழங்கள், இயற்கை உணவுகள் ஆகிய சத்துக்கள் குறித்தும் தரப்பட்டுள்ளன. விரைவில் இந்த செயலி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது" என்று தெரிவித்தார்.