ஒய்.எஸ்.ஆர் வாகன மித்ரா திட்டத்தின் கீழ், ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்களுக்கு தலா ரூ.10,000 நிதியுதவியை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் வழங்கினார்
ஒய்.எஸ்.ஆர் வாகன மித்ரா திட்டத்தின் கீழ் 2,75,931 பயனாளிகளுக்கு தலா ரூ.10,000 நிதியுதவியை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் வழங்கினார். விஜயவாடாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த பட்டனை அவர் க்ளிக் செய்தார். இதன்மூலம், பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக அந்த நிதி வரவு வைக்கப்பட்டது.
இன்று வழங்கப்பட்ட ரூ.275.93 கோடி நிதியுதவியுடன் சேர்த்து இத்திட்டத்தின் கீழ் மாநிலத்தில் உள்ள தகுதியான ஆட்டோ மற்றும் கேப் உரிமையாளர்களுக்கு ஆந்திர மாநில அரசு மொத்தம் ரூ.1,301.89 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது.
போராட்டக் களமான பேராசியர் அன்பழகன் வளாகம்: 17 ஆசிரியர்கள் மயக்கம்!
ஆட்டோ, டாக்சி மற்றும் மேக்ஸி கேப் ஓட்டுநர்களின் குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதற்கும், காப்பீட்டு பிரீமியம், தகுதி சான்று, வாகன பராமரிப்புச் செலவுக்கான அவர்களின் செலவுகளை குறைப்பதற்கும் ஒய்.எஸ்.ஆர் வாகன மித்ரா திட்டத்தை ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி கடந்த 2021ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. அதன்படி, இத்திட்டத்தின் பலனை பெற சொந்தமாக ஆட்டோ/டாக்சி வைத்து ஓட்டும் ஓட்டுநர்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.10,000 வழங்கப்படுகிறது.
பொருளாதார ரீதியாக நலிவடைந்த டாக்ஸி, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிதி உதவி வழங்குவதன் மூலம் அவர்களின் வருமானத்தை அதிகரிப்பது மற்றும் வாகன பழுதுபார்க்கும் செலவைக் குறைப்பது உள்ளிட்டவை இத்திட்டத்தின் நோக்கமாகும்.