தேர்தலின் போது இலவசங்களை வழங்கும் கலாச்சாரத்தை சாடிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இமேஜ் இல்லாத காங்கிரஸ் போன்ற கட்சிகள் வழங்கும் உத்தரவாதங்களை மக்கள் ஒருபோதும் நம்பமாட்டார்கள் எனக் கூறினார்.
தேர்தலின் போது இலவசங்களை வழங்கும் கலாச்சாரத்தை சாடிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இமேஜ் இல்லாத காங்கிரஸ் போன்ற கட்சிகள் வழங்கும் உத்தரவாதங்களை மக்கள் ஒருபோதும் நம்பமாட்டார்கள் எனக் கூறினார்.
ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்குடன் பிரத்தியேகமாக பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "குஜராத், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், அசாம், மணிப்பூர் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் பல உத்திரவாதங்களை வாரி இறைத்துள்ளனர். இங்கு அளிக்கும் உத்தரவாதங்களை விட அவை மேலானவை தான். காங்கிரஸ் ஒரு இமேஜ் இல்லாத கட்சி, அவர்களின் உத்தரவாதத்தை யார் நம்புவார்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.
undefined
மாதந்தோறும் 2000 ரூபாயும், 200 யூனிட் இலவச மின்சாரமும் வழங்குவதாக காங்கிரஸ் அளித்த வாக்குறுதி பற்றி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமித் ஷா, “அதைப்பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. ஏற்கெனவே ரூ. 1 லட்சத்துக்கு இலவச கழிவறைகளைக் கட்டிக்கொடுத்துள்ளோம். காஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கியுள்ளோம்; வீடுகளுக்கு இலவசமாக மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தங்குவதற்கு வீடுகளும் கட்டிக் கொடுக்கப்பட்டன. இலவச உணவு தானியங்கள் விநியோகிக்கிறோம். விவசாயிகளுக்குக்கூட 10,000 ரூபாய் கிடைக்கிறது. இவை ஏற்கெனவே நடைமுறையில் உள்ளன. உத்தரவாதங்கள் தேவையில்லை. எங்கள் ஆட்சியில் மக்கள் இதை எல்லாம் இப்போதே பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்."
காங்கிரஸ் முகமே இல்லாத கட்சி... வாக்குறுதிகளுக்கு உத்தரவாதம் கிடையாது! அமித் ஷா விமர்சனம்
"இதெல்லாம் ஒருநாள் கைவிடப்படும் என்று வாக்காளருக்குத் தெரியும்... இந்த 2000 ரூபாயை வைத்து அவர்கள் என்ன சாதிப்பார்கள்?" என்ற ஷா அதைப்பற்றி விவாதிக்கவே தேவையில்லை என மறுத்துவிட்டார். "எங்களை ஏழை மக்கள் புரிந்துகொள்வார்கள். ஏனென்றால் அவர்கள் நரேந்திர மோடி அரசின் திட்டங்களால் பயன் அடைந்தவர்கள்" எனவும் அமித் ஷா குறிப்பிட்டார்.
கர்நாடகாவில் வரும் மே 10ஆம் தேதி சட்டப்பேரவைத் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 13ஆம் தேதி நடைபெறும். இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களைக் கவர காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக இலவசங்களை அறிவித்துவருகிறது. அமித் ஷா அதனைக் கண்டித்துப் பேசியுள்ளார்.
ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துக்கும் தலா ஒரு கோடி ரூபாயும், கல்யாண கர்நாடகா பகுதிக்கு 5,000 கோடி ரூபாயும் ஒதுக்கப்படும் என வாக்காளர்களுக்கு காங்கிரஸ் உறுதி அளித்துள்ளது. இவை தவிர ஒவ்வொரு வீட்டிற்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2,000, வேலையில்லாத டிப்ளோமாதாரர்களுக்கு ரூ.1,500 மற்றும் வேலையற்ற பட்டதாரிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு ரூ.3,000, அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம், வறுமை கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்களுக்கு மாதம் 10 கிலோ இலவச அரிசி என ஐந்து முக்கிய வாக்குறுதிகளை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
இந்த வார தொடக்கத்தில், பிரதமர் நரேந்திர மோடியும் இலவசங்களை விநியோகிக்கும் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதாக காங்கிரஸ் கட்சியை கடுமையாகச் சாடினார். காங்கிரஸை கிண்டல் செய்த பிரதமர் மோடி, கட்சியின் காலாவதி ஆகிவிட்ட கட்சி என்றும் அந்தக் கட்சி அளிக்கும் உத்தரவாதங்களில் அர்த்தமில்லை என்றும் கூறினார்.