அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் இந்தியப்பிரிவு தலைவர் குண்டுவீசி கொலை !

By Selvanayagam PFirst Published Oct 8, 2019, 9:04 PM IST
Highlights

அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் இந்திய துணைக்கண்டப் பிரிவுத் தலைவர் ஆசிம் உமர், ஆப்கானிஸ்தான், அமெரிக்கா கூடுப்படைகளின் குண்டுவீச்சில் கொல்லப்பட்டார்.

கடந்த செப்டம்பர் மாதம் 23-ம் தேதி ஆப்கானிஸ்தான், அமெரி்க்க படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில் ஆப்கானிஸ்னின் ஹெல்மாண்ட் மாகாணத்தில் உள்ள முசா குலா மாவட்டத்தில் பதுங்கி இருந்த ஆசிம் உமர் கொல்லப்பட்டார் என்று ஆப்கானிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இதை இன்று அந்நாட்டு அரசு உறுதிசெய்துள்ளது


ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு அமைப்பு கூறுகையில், “ ஆப்கானிஸ்தான், அமெரிக்க ராணுவம் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் இந்திய துணைக்கண்டத்துக்கான தலைவர் ஆசிம் உமர் கொல்லப்பட்டுள்ளார். 

இவர் பாகிஸ்தானில் பிறந்தவர் என்று கூறப்படுகிறது, சில தகவல்கள் இவர் இந்தியாவில் பிறந்தவர் என்றும் தெரிவிக்கிறது. இந்த தாக்குதலில் உமருடன் சேர்்த்து இன்னும் 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுமட்டுமல்லாமல் இந்த குண்டுவீச்சல் முசா குலா மாவட்டத்தில் பொதுமக்கள் 40-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

click me!