
உலக அளவில் பணக்கார நாடுகள் எவை? என்பதை குறித்து ஒரு ஆய்வு நடத்தியது ஏ.எஃப்.ஆர் ஆசியா வங்கி. அந்த ஆய்வில் கிடைத்திருக்கும் புள்ளி விவரங்களை அடிப்படையாகக் கொண்டு, உலகில் பணக்கார நாடுகள் இவை தான். என ஒரு பட்டியலை வெளியிட்டிருக்கிறது ஏ.எஃப்.ஆர் ஆசியா.
அந்த பட்டியலில் இந்தியாவிற்கு 6வது இடம் கிடைத்திருக்கிறது. முதல் இடத்தை வழக்கம் போல அமெரிக்கா தான் பெற்றிருக்கிறது. இதன் சொத்து மதிப்பு மட்டும் 62,587 பில்லியன் டாலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது இடத்தை பிடித்திருக்கும் சீனாவின் சொத்து மதிப்பு 24,803 பில்லியன் டாலர்கள். 19,522 பில்லியன் டாலர்கள் சொத்துமதிப்புடன், மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது ஜப்பான்.
8,230 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன், 6வது இடத்திலிருக்கும் இந்தியா, வரும் 2027-ல் பிரிட்டனை பின்னுக்கு தள்ளிவிட்டு, 4வது இடத்தை பிடிக்க வாய்ப்பிருப்பதாகவும், இந்த ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த கணிப்பில் அரசு நிதியை நீக்கிவிட்டு, இந்தியாவின் மொத்த தனியார் சொத்து மதிப்பு தான் கணக்கிடப்பட்டிருக்கிறது, என்பது குறிப்பிடத்தக்கது
அதிக அளவிலான தொழில் முனைவோர், பி.பி.ஓ, கே.பி.ஓ சேவைகள், மென்பொருள் துறை வளர்ச்சி, மருத்துவம் மற்றும் ஊடகத்துறையின் வளர்ச்சி போன்றவை தான், இந்தியாவின் இந்த வளர்ச்சிக்கு காரணம் என்றும் அதில் கூறப்பட்டிருகிறது.