"பெண் குழந்தை பிறந்தால் ரூ.50 ஆயிரம்" - மக்களின் ஆதரவை அள்ளும் ஆதித்யநாத்

 
Published : Apr 12, 2017, 04:39 PM ISTUpdated : Sep 19, 2018, 03:08 AM IST
"பெண் குழந்தை பிறந்தால் ரூ.50 ஆயிரம்" - மக்களின் ஆதரவை அள்ளும் ஆதித்யநாத்

சுருக்கம்

adityanath announes 50000 rs for baby girl

ஏழை குடும்பங்களில் பெண் குழந்தை பிறந்தால், ‘பாக்ய லட்சுமி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 50 ஆயிரம் வழங்க வேண்டும் என்று முதல்வர் ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதிரடி முதல்வர்

உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சி 15 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியைப் பிடித்துள்ளது. கோரக்பூர் எம்.பி. யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவி ஏற்றதில் இருந்து மாநிலத்தின் வளர்ச்சிக்காக புதிய திட்டங்களை அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

திட்டங்கள்

விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி, விவசாயிகளின் நிலுவை மின்கட்டணத்தை அரசே செலுத்துவது, கிராமங்களுக்கு 18 மணிநேரம் தடையில்லா மின்சாரம் உள்ளிட்ட பல திட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.

இந்நிலையில் பா.ஜனதாவின் தேர்தல் வாக்குறுதியில் முக்கியமான பெண்களின் முன்னேற்றங்களுக்கான திட்டங்களை நேற்று முதல்வர் ஆதித்யநாத் அறிவித்தார்.

ரூ.50 ஆயிரம்

இது குறித்து முதல்வர் ஆதித்யநாத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், “ தேர்தல் வாக்குறுதியின் முக்கியத் திட்டமான ஏழைக் குடும்பங்களில் பெண் குழந்தை பிறந்தால் அந்த குழந்தை பெயரில் ரூ.50 ஆயிரம் பணம் வைப்புத் தொகையாக வைக்கப்படும். மேலும், ‘லோக் கல்யாண் சங்கல்ப் பத்ரா’ திட்டம் குறித்து விரிவான செயல்திட்டம் அளிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

ரூ.2 லட்சம்

பெண் குழந்தை 6-ம் வகுப்பு படிக்கும் போது ரூ.3 ஆயிரம் வழங்கப்படும். 8-ம் வகுப்பு வந்தவுடன் ரூ.5 ஆயிரம், 10ம் வகுப்பு வந்தவுடன் ரூ.7 ஆயிரம், 12-ம் வகுப்பு படிக்கும் போது ரூ.8ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படும். 21 வயது நிறைவடைந்தவுடன் ரூ.2 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும்.

மறுமணத்துக்கு ரூ.51 ஆயிரம்

மேலும், விதைகளுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் ரூ.500ஆக உயர்த்தப்படுகிறது. விதைகள் மறுமணம் செய்துகொள்ள ஊக்கப்படுத்தும் வகையில் ஏற்கனவே ரூ.11 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. அதை ரூ.51 ஆயிரமாக உயர்த்தியுள்ளார்.

வரதட்சனைக் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவித்தொகையா ரூ.125 வழங்கப்பட்டு வந்த நிலையில், ரூ.500 ஆக உயர்த்தப்படும். வரதட்சனை கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சட்ட உதவித் தொகை ரூ.2,500 லிருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தவும் முதல்வர் ஆதித்யநாத்உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அவர் ெதரிவித்தார்.

 

PREV
click me!

Recommended Stories

இன்சூரன்ஸ் துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டை அனுமதிக்கும் மசோதா நிறைவேற்றம்!
அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி வழங்கும் SHANTI மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!