படுக்கைக்கு அழைத்தவர்களின் பட்டியலை விரைவில் வெளியிடுவேன்! தனுஷ் பட நாயகி அதிரடி!

 
Published : Jan 31, 2018, 12:41 PM ISTUpdated : Sep 19, 2018, 01:53 AM IST
படுக்கைக்கு அழைத்தவர்களின் பட்டியலை விரைவில் வெளியிடுவேன்! தனுஷ் பட நாயகி அதிரடி!

சுருக்கம்

Actress Parvathy action interview

தனக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தவர்களின் பட்டியலை வெளியிடுவேன் என்றும், அதற்கான வேலையை விரைவில் தொடங்குவேன் என்றும்  அவர்களின் முகத்திரையைக் கிழிப்பேன் என்றும் நடிகை பார்வதி கூறியுள்ளது கேரள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை பார்வதி, கேரள மாநிலத்தில் கோழிக்கோட்டில் பிறந்தவர். மலையாளம், தமிழ் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். 2006 ஆம் ஆண்டில் வெளியான அவுட் ஆப் சிலபஸ் என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் பிரவேசமானார். தமிழில் பூ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதன் பின்பு மரியான் திரைப்படத்தில் நடித்துள்ளார். பூ திரைப்படத்துக்காக தமிழின் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினைப் பெற்றுள்ளார். அதோடு விஜய் டிவியின் புதுமுக நடிகைக்கான விருதையும் அவர் பெற்றுள்ளார்.

மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார் பார்வதி. ஒரு படத்தில், பெண் போலீஸ் அதிகாரியிடம் நடிகர் மம்முட்டி பேசும் வசனத்தை பார்வதி கண்டித்துக் கூற, மம்முட்டியின் ரசிகர்கள் அவரை சமூ கவலைத்தளங்களில் கடும் விமர்சனம் செய்தனர்.

ஆனால், மம்முட்டியோ அவரின் ரசிகர்களை கண்டிக்காமல் வேடிக்கைப் பார்த்தார். ஆனால், பார்வதி அளித்த புகாரின்பேரில் அவரை மிகவும் தரக்குறைவாக விமரிசித்த சிலர் கைது செய்யப்பட்டனர். 

கேரள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் நடிகர் பார்வதியும் உள்ளார். இந்த நிலையில், நடிகை பார்வதி பேட்டி ஒன்று அளித்துள்ளார்.

நான் பிரச்சனையை சந்தித்தபோது, அதைக் கண்டும காணாமல் போகச் சொன்னார்கள். இதுபோல நிறைய பார்த்திருக்கிறேன். கடந்த சென்று விடு என் மம்முட்டி கூறினார்.

மேலும், ஒரு இடத்தில் இது பற்றி பேசியபோது, எனக்காக பேச நான் யாரையும் நியமிக்கவில்லை என்றுதான் கூறினாரே தவிர, அவரது ரசிகர்கள் கூறியது தவறு என அவர் குறிப்பிடவில்லை. அது எனக்கு வருத்தத்தை கொடுத்தது என்றார்.

சினிமாவில் நடிகைகள் சந்திக்கும் பாலியல் தொல்லைகள் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றுதான் பல காரியங்களை செய்து கொண்டிருக்கிறோம். அவர்களின் முகத்திரையைத் தோலுரித்துக் காட்ட வேண்டும் என்பதே  என் விருப்பம்.

எனக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தவர்களின் பட்டியலை வெளியிடுவேன் என்றும், அந்த வேலையை விரைவில் தொடங்குவேன் என்றும் பேட்டியின்போது பார்வதி ஆவேசமாக கூறியுள்ளார். பார்வதியின் இந்த பேட்டி, கேரள திரையிலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!
பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!