பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு "5 ஆண்டு சிறை..ரூ.10 ஆயிரம் அபராதம்"..!

 
Published : Apr 05, 2018, 02:22 PM ISTUpdated : Sep 19, 2018, 02:12 AM IST
பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு "5 ஆண்டு சிறை..ரூ.10 ஆயிரம் அபராதம்"..!

சுருக்கம்

actor salman khan is culprit and he punished by 5 years jail

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறை..

மான் வேட்டையாடியதாக பாலிவுட் நடிகர் சல்மான்கான்,தபு உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்கில் சல்மான் கான் தான் குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனை தொடர்ந்து,அவருக்கு 5 ஆண்டு கால சிறை தண்டனையும்,ரூ.10 ஆயிரம்  அபராதமும்  விதித்தது ஜோத்பூர்  நீதிமன்றம்.

1998 ஆம் ஆண்டு, ராஜஸ்தான் ஜோத்பூர் பகுதியில், "ஹம் சாத் சாத் ஹே" என்ற படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன்,அக்டோபர் 1 ஆம் தேதி இரவு  நடிகர் சல்மான் கான் 2 மான்களை சுட்டுக்கொன்றுள்ளார்.அவருடன் மற்ற துணை நடிகர்களும் இருந்துள்ளனர்

இது தொடர்பாக  நடிகா்கள் சல்மான்கான், சைப் அலி கான், தபு, சோனாலி, பிந்த்ரே, நீலம்  ஆகியோர் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஜோத்பூா் நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த நிலையில், கடந்த 28 ஆம் தேதி விசாரணை முழுவதும முடித்து வைக்கப் பட்டது.

இந்நிலையில், மான்வேட்டை வழக்கில்  நடிகர் சல்மான் கான்  தான் குற்றவாளி  என அறிவிக்கப்பட்டு, அவருக்கு 5 ஆண்டு கால  சிறை தண்டனையும், ரூ.10  ஆயிரம்  அபராதமும் விதித்தது ஜோத்பூர் நீதிமன்றம்.

PREV
click me!

Recommended Stories

தேர்வு மையமாக மாறிய விமான ஓடுதளம்! 187 காலி இடங்களுக்கு 8000 பேர் போட்டி! பட்டதாரிகளின் பரிதாப நிலை!
டிரெண்டிங்கில் பிரதமரின் ஓமன் பயணம்! மோடி காதில் மின்னிய அந்தப் பொருள் இதுதான்!