டெல்லியில் யாருக்கு அதிகாரம்... முதல்வருக்கா? ஆளுநருக்கா? உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

By vinoth kumarFirst Published Feb 14, 2019, 1:07 PM IST
Highlights

டெல்லியில் யாருக்கு அதிக அதிகாரம் உள்ளது என்பது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மாறுப்பட்ட தீர்ப்பை வழங்கியுள்ளது. 

டெல்லியில் யாருக்கு அதிக அதிகாரம் உள்ளது என்பது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மாறுப்பட்ட தீர்ப்பை வழங்கியுள்ளது. 

டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் இருந்து வருகிறார். இந்நிலையில் அவ்வப்போது டெல்லி மற்றும் புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கும், மத்திய அரசால் நியமனம் செய்யப்பட்ட துணைநிலை ஆளுநருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.  

இந்நிலையில் இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பில் துணைநிலை ஆளுநருக்கே அதிக அதிகாரம் உள்ளது என 2018-ம் ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டது. இதனை எதிர்த்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கின் தீர்ப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அந்த தீர்ப்பில் துணைநிலை ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது என்றும் அவர் அமைச்சரவையுடன் இணக்கமாக செயல்படவேண்டும் என்று கூறினர். அனைத்து அதிகாரங்களும் டெல்லி அரசுக்கு உள்ளதாக தீர்ப்பளிக்கப்பட்டது. 

இந்த தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததால் அதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகளும், தனித்தனியாக தீர்ப்பை வழங்கினர். நீதிபதி சிக்ரி அவர் கூறிய தீர்ப்பில் முக்கிய பொறுப்புகளில் உள்ள அதிகாரிகள் நியமனம் ஆளுநரின் அதிகாரத்தில் இருப்பதாக கூறியுள்ளார். ஆணையர்கள் மற்றும் செயலாளர்கள் நியமனம் ஆளுநருக்கு உட்பட்டது என்றும், ஊழல் கண்காணிப்பு அமைப்பு துணை நிலை ஆளுநரின் வசம் இருக்கும் என்றும் கூறினார். 

மற்றொரு நீதிபதி அசோக் பூஷன் டெல்லி அரசுக்கே அதிகாரம் என மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். இதனால் அரசு - துணைநிலை ஆளுநர் இடையேயான யாருக்கு அதிகாரம் என்ற குழப்பம் தொடர்ந்து நீடித்து வருகிறது. டெல்லியை போன்று புதுச்சேரியிலும் துணைநிலை ஆளுநர் - முதல்வர் இடையேயான மோதல் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் இந்த தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. ஆனால் இரண்டு நீமிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளதால், வழக்கு 3-வது நீதிபதியின் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

click me!