சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகை விவகாரம் - ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியின் அறிக்கை தயார்...

Asianet News Tamil  
Published : Aug 09, 2017, 03:56 PM ISTUpdated : Sep 19, 2018, 12:59 AM IST
சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகை விவகாரம் - ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியின் அறிக்கை தயார்...

சுருக்கம்

A retired IAS officer Vinay Kumar has been informed about the issue of special privileges to Sasikala.

சசிகலாவுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்பட்ட விவகாரம் குறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வினய் குமார் தலைமயில், அறிக்கை தயார் நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கர்நாடக சிறைத்துறை, டி.ஐ.ஜி.,யாக இருந்த, ரூபா, பெங்களூரு மத்திய சிறையை ஆய்வு செய்து, அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு , சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதாகவும் அதற்காக சிறை அதிகாரிகள் 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் குற்றச்சாட்டுகளை வைத்தார்.

இதையடுத்து, சிறை முறைகேடுகள் பற்றி விசாரிக்க, ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, வினய்குமார் தலைமையில்,அரசு, விசாரணை கமிஷன் அமைத்தது. 

இதைதொடர்ந்து வினய்குமார் குழுவினர், ஓய்வு பெற்ற, டி.ஜி.பி., சத்யநாராயண ராவ், டி.ஐ.ஜி., ரூபா ஆகியோரை, ரகசிய இடத்துக்கு வரவழைத்து, தனித்தனியாக விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின.

இந்த விசாரணையின் போது, பெங்களூரு சிறையில் நடந்துள்ள ஊழல்கள் குறித்து, நேர்மையான முறையில் அறிக்கை அளித்துள்ளதாகவும், யாரையும் குறி வைத்து, அறிக்கை தயாரிக்கவில்லை எனவும் ரூபா தெரிவித்ததாக தெரிகிறது. 

இந்த தகவல்களை பதிவு செய்து கொண்ட, விசாரணை கமிஷன் அதிகாரிகள், சிறை கண்காணிப்பாளர்களாக இருந்த, கிருஷ்ண குமார், மற்றும் அனிதாவிடம் ஆகியோரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.

இந்நிலையில், சசிகலாவுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்பட்ட விவகாரம் குறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வினய் குமார் தலைமயில், அறிக்கை தயார் நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

PREV
click me!

Recommended Stories

ஜெட் வேகத்தில் பலமாகும் பாஜக..! இடிந்து விழும் கம்யூனிஸ்ட் கோட்டை.. பீதியில் காங்கிரஸ்..!
சென்னை, திருச்சி, நாகர்கோவில் பயணிகளுக்கு புதிய ரயில்கள்.. முழு ரூட் லிஸ்ட் இங்கே