6 முறை உயர்வுக்குப் பின் பெட்ரோல் விலை முதல் முறையாக குறைப்பு

 
Published : Nov 16, 2016, 02:35 PM ISTUpdated : Sep 19, 2018, 01:43 AM IST
6 முறை உயர்வுக்குப் பின் பெட்ரோல் விலை முதல் முறையாக குறைப்பு

சுருக்கம்

புதுடெல்லி, நவ. 16-

பெட்ரோல் லிட்டருக்கு ரூ.1.46 காசுகளும், டீசல் ரூ.1.53 காசுகளும் குறைத்து அரசு எண்ணெய் நிறுவனங்கள் நேற்று அறிவித்தன. இந்த விலை குறைப்பு நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்தது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து,  பெட்ரோல் விலை 6 முறை உயர்த்தப்பட்ட நிலையில், முதல் முறையாக விலை குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோல, டீசல் விலை தொடர்ந்து 3 முறை  உயர்த்தப்பட்ட நிலையில், முதல் முறையாக தற்போது குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் கடைசியாக கடந்த 1-ந்தேதி பெட்ரோல் லிட்டருக்கு 0.89 காசுகளும், டீசல் 0.86 காசுகளும் உயர்த்தப்பட்டு இருந்தன. ஒட்டுமொத்தமாக கடந்த இரு மாதங்களில் பெட்ரோல் ரூ.7.53 காசுகள் உயர்த்தப்பட்டு, தற்போது ரூ.1.46 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. டீசல் கடந்த 3 முறையில் ரூ.3.90 காசுகள் உயர்த்தப்பட்டு தற்போது, ரூ.1.53 காசுகள் குறைக்கப்பட்டுள்ளன.

இனி டெல்லியில் பெட்ரோல் லிட்டர் ரூ.65.93 காசுகளுக்கும், டீசல் லிட்டர் ரூ.54.71 காசுகளுக்கும் விற்கப்படும்.

PREV
click me!

Recommended Stories

எங்களால் யாருக்கும் ஆபத்து இல்லை.. இந்தியா-ரஷ்யா உறவு பற்றி புடின் உறுதி!
ஜார்க்கண்ட் அரசியலில் திடீர் திருப்பம்! டெல்லியில் பாஜகவுடன் டீல் பேசிய ஹேமந்த் சோரன்!