"தேர்தல் முடிந்த பிறகு தியாகிகளை யாரும் நினைவு கூர்வதில்லை. அரசு சார்பில் கொடுத்த வீடு இடிந்து விழும் நிலையில் உள்ளது. ஒரு பள்ளிக்கூடம் கட்டப்பட்டு அவர் பெயரை சூட்டுவதாகச் சொன்னார்கள். ஆனால் அதற்கான அறிகுறியும் இல்லை" என்று குடும்பத்தினர் கவலை தெரிவிக்கின்றனர்.
புல்வாமா தாக்குதலில் உயிர்த்தியாகம் செய்த பாதுகாப்புப்படை வீரரின் குடும்பத்திற்கு அளித்த வாக்குறுதிகள் 5 ஆண்டுகளாகியும் நிறைவேற்றப்படவில்லை.
2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 39 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அவர்களில் ஒருவரான அஷ்வின் கச்சியின் குடும்பத்தினர் மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகே உள்ள குடவால் கிராமத்தில் வசிக்கிறார்கள்.
இந்நிலையில், அஷ்வின் கச்சியின் குடும்பத்தினர் புல்வாமா தாக்குதலின் ஐந்தாவது ஆண்டு நினைவு நாளில் அரசு தரப்பில் யாரும் வந்து தங்களைச் சந்திக்க வரவில்லை என்று கூறியுள்ளனர். அதே நேரத்தில் மத்தியப் பிரதேச அரசு அளித்த பல வாக்குறுதிகள் வெறும் வாக்குறுதிகளாகவே உள்ளன என்றும் கூறுகின்றனர்.
அஷ்வின் கச்சிக்கு சிலை அமைப்பதாக ம.பி. அரசு கூறியிருந்த நிலையில், அரசை எதிர்பார்த்து சோர்ந்து போன குடும்பத்தினர் சொந்தமாக சிலை வைத்துள்ளனர். கடந்த ஆண்டு இது குறித்த செய்தி வெளியானபோது, சிலையைச் சுற்றி ஒரு தோட்டம் அமைத்துத் தருவதாக ம.பி. அரசு உறுதியளித்தது. ஆனால் ஒரு செங்கல் கூட வைக்கப்படவில்லை என்று அஷ்வின் கச்சியின் குடும்பத்தினர் சொல்கின்றனர்.
Explained: தேர்தல் பத்திரம் என்றால் என்ன? ஏன் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது?
"தேர்தல் முடிந்த பிறகு தியாகிகளை யாரும் நினைவு கூர்வதில்லை. அரசு சார்பில் கொடுத்த வீடு இடிந்து விழும் நிலையில் உள்ளது. ஒரு பள்ளிக்கூடம் கட்டப்பட்டு அவர் பெயரை சூட்டுவதாகச் சொன்னார்கள். ஆனால் அதற்கான அறிகுறியும் இல்லை" என்று குடும்பத்தினர் கவலை தெரிவிக்கின்றனர்.
"ராணுவம் மற்றும் சிஆர்பிஎஃப் அதிகாரிகள் மற்றும் சில முன்னாள் ராணுவ வீரர்கள் புல்வாமா தாக்குதல் நினைவு நாளில் அஷ்வின் கச்சியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஆனால் எந்த ஒரு பொது பிரதிநிதியோ அல்லது அரசாங்க அதிகாரியோ வரவில்லை" என்று அவர்கள் கூறுகின்றனர்.
கச்சியின் குடும்பத்தினர் ரூ.6 லட்சம் செலவில் சிலையை கட்டியுள்ளனர். “அஸ்வினின் இறுதிச் சடங்குகளின் போதும், நாங்கள் கட்டிய சிலை திறப்பு விழாவின் போதும், அவர் பெயரில் பள்ளிக்கூடம் கட்டப்படும் என்றும், சிலை இருக்கும் இடம் பூங்காவாக மாற்றப்படும் என்றும் கூறியிருந்தனர். ஆனால், அவை இன்னும் அப்படியே உள்ளன" என்று அஷ்வினின் சகோதரர் சுமந்த் சொல்கிறார்.
இது குறித்து அவரது அண்ணன் மகள் பிரியங்கா கச்சி கூறுகையில், ''மக்கள் பிரதிநிதிகளிடம் எனது மாமா பெயரில் பள்ளிக்கூடம் கட்டுவது குறித்தும், பூங்கா கட்டுவது குறித்தும் பேசினால், 'அரசிடம் இருந்து 1 கோடி ரூபாய் கிடைக்கவில்லையா?' என்கிறார்கள். எந்த ராணுவ வீரனின் தியாகத்தையும் பணத்தால் எடைபோடக்கூடாது. ஜவான்களின் தியாகம் தேர்தல் நேரத்தில் ஒரு பிரச்சினையாக மாற்றப்படுகிறது. ஆனால் அவர்களுக்கு அஞ்சலி செலுத்த யாரும் வருவதில்லை. அரசு கொடுத்த வீடும் பரிதாபகரமான நிலையில் உள்ளது. வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன" என்கிறார்.
மத்தியப் பிரதேசத்தில், தியாகிகளின் குடும்பங்களுக்கு அரசு ரூ.1 கோடி நிதியுதவியும் வீடும் வழங்கப்படுகிறது. ராணுவ வீரரின் நினைவாக பள்ளி ஒன்றும் கட்டப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அஷ்வின் கச்சி குடும்பத்துக்கு அரசு 1 கோடி ரூபாய் வழங்கியது. வீடும் ஒதுக்கியது, ஆனால் மற்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
தினமும் ரூ.1.5 கோடி சம்பாதிக்கும் குப்பை சேகரிப்பாளர்கள்! டெல்லியில் குப்பைக்கே இவ்ளோ வேல்யூவா!