பெட்ரோல் அரசியல்! மோடி ஸ்டேட்ல கம்மி!  தமிழ்நாட்ல குறைக்க என்னமோ தடுக்குது!  

First Published Oct 6, 2017, 6:28 PM IST
Highlights
5 percent vat tax reduced on petrol diesel in gujrat but not in tamilnadu


பெட்ரோல் விலையை ஒவ்வொரு நாளும் சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப நிர்ணயம் செய்து கொள்ளும் முறை அறிமுகப்பட்ட உடன், கணக்கே தெரியாமல், கண்ணுக்கே தெரியாமல் விலை கிடு கிடு வென உயர்ந்துவிட்டது என்று பரவலாக விமர்சனம் முன்வைக்கப்பட்டது. 

இந்நிலையில்,  நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறை என ஜிஎஸ்டி., அமலானது. ஆனால் எத்தனையோ பொருள்கள் ஜிஎஸ்டி.,க்குள் வந்துவிட, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோல்-டீசல் ஆகியவை மட்டும் விலகியே இருந்தன.  அவற்றின் மீது, பழைய விற்பனை வரி, வாட் வரி ஆகியவையே இப்போதும் விதிக்கப்படுகின்றன. இதனால்,  இயற்கை எரிவாயு, பெட்ரோல், டீசலை பயன்படுத்தும் தொழில் நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

வாட் வரியைக் கட்டிவிட்டு, ஏற்கெனவே எரிபொருள்களுக்கு எனக் கட்டிய வரியை கேஸ், பெட்ரோல், டீசல் பயன்படுத்தும் தொழில் நிறுவனங்களால் திரும்பப் பெற இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இவற்றின் உற்பத்திப் பொருட்கள் விலை உயர்வதுடன் விலைகளிலும் மாறுபாடு நிலவுகிறது. 

இந்நிலையில் இப் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டுமென்றால், மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீது விதிக்கும் 5 சதவீத வாட் வரி விதிப்பை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். இதனை வலியுறுத்தி அவர் மாநில அரசுகளுக்குக் கடிதமும் எழுதினார். 

தற்போதைய நிலையில்,  பெட்ரோல்- டீசல் மீது  மத்திய அரசு 23 சதம், மாநில அரசுகள் 34 சதம் என வரி விதிக்கின்றன. இந்நிலையில், மத்திய அரசின் கோரிக்கைப்படி,  பாஜக., ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை விலக்கிக் கொள்ள அந்த அரசுகள்  முன் வந்துள்ளன.  அவ்வகையில், குஜராத் மாநில அரசு முதல் மாநிலமாக பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியில் 5 சதவீதத்தை ரத்து செய்துள்ளது. இதைத் தொடர்ந்து, பாஜக., ஆளும் மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், உத்தராகண்ட், ஜார்கண்ட் மாநிலங்களும் குஜராத் மாநிலத்தைப் பின்பற்ற முடிவு செய்துள்ளன. 

ஆனால், மத்திய பிரதேச மாநில அரசு, தீபாவளி பரிசாக, வாட் வரி நீக்கத்தை அளிக்கும் என்று முதல்வர் சிவராஜ் சவுகான் கோடிட்டுக் காட்டியுள்ளார். 

ஆனால், தமிழ்நாடு, கேரளம், பஞ்சாப், ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் வாட் வரி விதிப்பில் 5 சதத்தைக் குறைக்க தயக்கம் காட்டுகின்றன. பெரும் வருவாய் இழப்பு ஏற்படும் என்று அச்சப்படுவதே காரணம். தமிழகத்திலும் இந்த ஆண்டு தொடக்கத்தில் பெட்ரோல், டீசல் மீது 27 சதவீத வரி விதிப்பு இருந்தது. ஆனால் மார்ச் மாதத்தில் அது 34 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் வாட் வரியில் சிறிதும் குறைக்க வாய்ப்பில்லை என்று தன் நிலையில் நிற்கிறது தமிழக அரசு. 

click me!